மதுரை அருகே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
![மதுரை அருகே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் மதுரை அருகே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்](https://www.nativenews.in/h-upload/2022/12/10/1627972-img-20221210-wa0014.webp)
குண்டும் குழியுமான உள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தி 100 வது வார்டு பெரியார்நகர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே, அவனியாபுரம் பகுதியில் சந்தோஷ நகர் அமைந்துள்ளது. இங்கு, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்கள் வசிக்கின்றனர்.கடந்த பத்து வருடங்களாக முறையற்ற சாலை வசதிகளால், பள்ளி வாகனம், குப்பைகளை அள்ளும் வண்டி ஏதும் உள்ளே வருவதில்லையாம். இதனால், பகுதியில் உள்ள மக்கள் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்பட்ட்டது. .
இதை உடனடியாக சரி செய்து தருமாறு, மதுரை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர் செல்லும் கால்வாயில் தண்ணீர் வெளியேற முடியாமல் இருப்பதால், சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதைக் கண்டித்து நடைபெற்ற சாலை மறியலால், அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மதுரை மாநகரில், பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மதுரை அண்ணாநகர் சௌபாக்ய விநாயகர் தெரு, அன்புமலர் தெரு, கோமதிபுரம் ஜூபிலி டவுன், தாழை வீதியில் சாலை மோசமாக இருப்பதால், பலர் சாலையில் வழுக்கி கீழே விழும் நிலை உருவாதியுள்ளது. மதுரை தாசில்தார் நகர் வீரவாஞ்சி தெருவில், சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. எனவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu