/* */

அரிமா சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் அரிமா சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

அரிமா சங்கம் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான   மருத்துவ உபகரணங்கள் வழங்கல்
X

அரிமா சங்கம் சார்பில், ரூ.3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளுக்கிணங்க, கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, பல்வேறு தனியார் நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், தனி நபர்கள், தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகின்றனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி அரிமா சங்கம் சார்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கான மெத்தைகள் என மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர்.பரமசிவம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர்.கோவிந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், அரிமா சங்க பிரதிநிதிகள் சிவக்குமார், பாண்டுரங்கன், ராமநாதன், ஜெயபிரகாஷ், தசரதராவ், சந்திரசேகரன், அசோக்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 7 July 2021 2:30 AM GMT

Related News