ஆணவப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கரூரில் முடிதிருத்தும் தொழிலாளி ஆணவ படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கரூரில் மாற்று சாதி பெண்ணை காதலித்த முடிதிருத்தும் தொழிலாளி ஹரிகரன் என்பவர். கடந்த 6 ம் தேதி பெண்ணின் உறவினர்களால் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை விவகாரம் தொடர்பாக கரூர் நகர காவல்நிலைய போலீசார் வழக்கு பதிந்து பெண்ணின் தந்தை, சித்தப்பா, மாமா உள்ளிட்ட 5 உறவினர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், சாமானிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆணவ படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் ஆணவப் படுகொலை அதிகரித்து வருவதை கண்டித்து ஆளும் கட்சியின் அஜாக்கிரதையால் ஆணவக் படுகொலை அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து ஆணவ படுகொலைக்கு கடுமையான தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஹரிகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Next Story