சேவல் சண்டைக்கு மீண்டும் அனுமதி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாள்கள் சேவல் சண்டை நடத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது.

கரூர் பொங்கல் பண்டிகையின்போது, 3 நாள்கள் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிள்ளது. கரூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையின்போது பூலாம்வலசு என்ற இடத்தில் பாரம்பரியமிக்க சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். இந்த சண்டையில் கரூர், சேலம் நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சேவல்களை அதன் உரிமையாளர் எடுத்து வந்து சேவல் சண்டையில் கலந்து கொள்வார்கள்.

கடந்த 2014 ம் ஆண்டு சேவல் சண்டை நடந்தபோது சேவல் காலில் கட்டியிருந்த கத்தி குத்தி 2 பேர் உயிரிழந்தனர் இத்பின்னர், சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது இதையடுத்து, மூன்று ஆண்டுகள் சேவல் சண்டை நடைபெறாமல் இருந்தது. அதன் பின்னர், சேவல் சண்டை நடத்துவோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர் மாவட்டத்தில் சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நீதிமன்றத்தை நாடினர்.

அப்போது நீதிமன்றம், நிறைய வழி காட்டு நெறிமுறைகள. வழங்கி அதன்படி சேவல் சண்டை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கலாம் என உத்தரவிட்டது. 2019 ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் சேவல் நடத்துவதற்கு அனுமதி வழங்கி மூன்று நாட்கள் சேவல்சண்டை நடத்தப்பட்டது.

நிகழாண்டில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் உள்ளதால் சேவல் சண்டை நடைபெறுமா என பொதுமக்களிடம் கேள்வி எழுந்த நிலையில், பூலாம்வலசு சேவல் சண்டை நடத்தும் அமைப்பு சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்குமாறு கடிதம் அளிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனைக்கு பிறகு பொங்கல் பண்டிகையின்போது ஜனவரி 13,14, 15 ஆகிய மூன்று நாட்கள் சேவல் சண்டை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து பூலாம்வலசு கிராமத்தில் வரும் 13 ம் தேதி சேவல் சண்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அந்த ஊர் கமிட்டியார் செய்து வருகின்றனர்.

Tags

Next Story