கரூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பணிகள் அமைச்சர் ஆய்வு

கரூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு பணிகள் அமைச்சர் ஆய்வு
கரூரில் உள்ள பிரசித்திபெற்ற கரூர் மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு விழாவுக்காக நடைபெற்று வரும் புனரமைப்பு திருப்பணிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் திருக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்படி வரும் 27 ஆம் தேதியன்று காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் கரூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இதற்கான புனரமைப்பு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பணிகளை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளை முறையாக விரைந்து செய்து முடிக்குமாறு கோவில் கமிட்டியார் உள்ளிட்டோருக்கு அறிவுரை வழங்கினார்.

Next Story