/* */

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புறக்கலைஞர்கள் மனு

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோயில் திருவிழாக்களை நடத்திட அனுமதி வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் நாட்டுப்புறக்கலைஞர்கள் மனு
X

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த நாட்டுப்புற கலைஞர்கள்

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்து நாட்டுப்புறக்கலைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கடந்த சில மாதங்களாக கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்த நிலையில் அனைத்து நாட்டுப்புறக்கலைஞர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

தற்போது தமிழகத்தில் மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை காரணமாக மீண்டும் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் திருவிழாக்களை நடத்திட தமிழக அரசு தடை விதித்த நிலையில் அனைத்து நாட்டுப்புறக்கலைஞர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோயில் திருவிழாக்களை நடத்திட அனுமதி அளிக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து நாட்டுப்புறக்கலைஞர்கள் சார்பில் கரகாட்டம் ஆடி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மனுவை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் இது குறித்து அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்

Updated On: 12 April 2021 3:46 PM GMT

Related News