சென்னை- நெல்லை சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு

சென்னை- நெல்லை சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு

வந்தே பாரத் ரயிலின் எழில்மிகு தோற்றம் (கோப்பு படம்).

சென்னை- நெல்லை சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை- திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வியாழக்கிழமைகளில் மட்டும் இயங்கி வந்த வந்தே பாரத் சிறப்பு ரயில் நாகர்கோவில் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கமாகவும் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரை ரயில் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி- சென்னை இடையே தினசரி (செவ்வாய் தவிர) வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தமிழகத்திற்குள் நீண்ட தூரம் இயக்கப்படும் மிக வேகமான பகல் நேர ரயிலாக உள்ளது. காலையில் திருநெல்வேலியில் எடுக்கப்படும் இந்த ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் , தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று சென்னை எழும்பூரை வந்தடைகிறது. 8 மணி நேரத்திற்கு முன்பாக இந்த ரயில் சென்னைக்கு வருவதால் பலரும் திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலை விரும்புகிறார்கள்.

இந்த ரயில் நவீன வசதியுடன் இருக்கைகள், விமானத்தில் செல்வது போல அனைத்து வசதிகளும் இருக்கிறது, இந்த ரயிலின் வேகம் 110 கிலோ மீட்டராக உள்ளது. சில இடங்களில் 130 கிலோ மீட்டர் வரை செல்கிறது. இந்த ரயிலில் மொத்தம் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கின்றன அதில் 7 பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட சாதாரண இருக்கைகள் மற்றும் ஒரு பெட்டியில் எக்ஸிக்யூடிவ் அதி நவீன இருக்கைகள் என மொத்தமாக 540 இருக்கைகள் உள்ளன. இந்த ரயில் பெரும்பாலும் ஹவுஸ் புல்லாகவே செல்கிறது. இந்த ரயிலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

திருநெல்வேலியில் அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை 1:50 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் பிற்பகல் 2:50 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலியை சென்றடைகிறது. அதாவது திருநெல்வேலியில் இருந்து சென்னை வருவோர், அதேநாளில் திருநெல்வேலி போக முடிகிறது.

இந்த ரயிலில் சென்னை டூ திருநெல்வேலி அல்லது திருநெல்வேலி டூ சென்னை செல்ல, உணவு, ஜி.எஸ்.டி., முன்பதிவு என அனைத்தும் சேர்த்து சாதாரண இருக்கை கட்டணம் ரூ.1,620 ஆகவும், எக்சிகியூடிவ் இருக்கை கார் கட்டணம் ரூ.3 ஆயிரத்து 55 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருநெல்வேலி மட்டுமின்றி, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறதுத.

தற்போதைய நிலையில் திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சொகுசு பேருந்தில் சென்றால் ரூ. 1000 முதல் 1200 ரூபாய் வரை பயணக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், 11 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். ஆனால் திருநெல்வேலிக்கே 7.50 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயிலில் போக முடிகிறது. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்வோருக்கு போவோருக்கு மட்டுமல்ல. அந்த வழியில் நின்று செல்லும் மாவட்டங்களில் இருந்து பயணிப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ' இந்நிலையில் வரவேற்பு அதிகமாக உள்ளதால் வியாழக்கிழமை தோறும் சென்னையில் இருந்து காலையில் கிளம்பும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு வந்தே ரயிலை நாகர்கோவில் வரை இயக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதுபற்றி பரிசீலித்த தெற்கு ரயில்வே முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் வியாழக்கிமை சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று அறிவித்துள்ளது. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ஜனவரி 4ம் தேதி முதல் சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 5.15 க்கு புறப்படும் வந்தே பாரத் ரயில், நாகர்கோவிலுக்கு மதியம் 2.10க்கு சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து 2.50க்கு புறப்பட்டு எழும்பூருக்கு இரவு 11.45க்கு வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் ஜனவரி 25 வரை சோதனை முயற்சியாக இப்படி சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags

Next Story