ஈரோட்டில் மாலை நேரத்தில் 'ஸ்ட்ரீட் ஃபுட் கோர்ட்' செயல்படுத்த பரிசீலனை

ஈரோட்டில் மாலை நேரத்தில்  ஸ்ட்ரீட் ஃபுட் கோர்ட் செயல்படுத்த பரிசீலனை
X

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி.

ஈரோட்டில் மாலை நேரத்தில் பொதுமக்களுக்காக 'ஸ்ட்ரீட் ஃபுட் கோர்ட்' தொடங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

ஈரோட்டில் மாலை நேரத்தில் பொதுமக்களுக்காக 'ஸ்ட்ரீட் ஃபுட் கோர்ட்' தொடங்குவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையாளர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஐஏஎஸ் தெரிவித்ததாவது:-

ஈரோடு மாநகராட்சியில் வரி வசூல் நிலுவையை முழுமையாக முடிக்கும் வகையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரப் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல், சாலை விரிவாக்கம், குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். மாநகராட்சியில் தினமும் குடிநீர் விநியோகம் என்பது குறிப்பிட்ட வார்டுகளில் மட்டுமே தற்போது அமலில் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் 2 மாதங்களுக்குள் முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஈரோடு மாநகர பகுதியில் உள்ள பூங்காக்கள் மேம்படுத்தப்படும். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள ஸ்டேட் வங்கி ரோட்டில் மாலை நேரத்தில் 'ஸ்ட்ரீட் ஃபுட் கோர்ட்' என்னும் ஒரு திட்டம் செயல்படுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இங்கு, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு ரோட்டின் இருபக்கமும் உணவகங்கள் மட்டும் செயல்படும் வகையில் மாற்றப்படும். இதன் மூலம் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags

Next Story