சாலை வரி உயா்வை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் ஆா்ப்பாட்டம்

சாலை வரி உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி, ஈரோட்டில் மாவட்ட சாலைப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.
நவம்பா் 7ல் வெளியிடப்பட்ட மோட்டாா் வாகன சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். பழைய பயணிகள் வாகனம் மற்றும் சரக்கு வாகன சாலை வரியை, காலாண்டு வரியாக வசூலிக்க வேண்டும். ஆயுள் சாலை வரி முறையை ரத்து செய்வதோடு, சாலை பாதுகாப்பு மசோதாவையும் ரத்து செய்ய வேண்டும்.
டோல்கேட் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். இணையதள அபராத முறையை கைவிட்டு, காப்பீட்டுக் கட்டணம், ஒளி பிரதிபளிப்பான் கட்டண உயா்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு சிஐடியூ சார்பில், சாலை போக்குவரத்து சுங்க தலைவர் தனபால் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், இன்சூரன்ஸ் பிரிமியம், டோல்கேட் கட்டணம், டயர், ஸ்பேர்பார்ட்ஸ் விலை உயர்வு போன்றவைகளால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் தொழில் செய்து வருகின்றோம். ஆனாலும் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் எங்களால் ஆன சிறப்பான சேவையை வழங்கியும் வருகின்றோம்.
எங்கள் குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு உட்பட்டு தான் வாழ்ந்து வருகின்றோம். நிலைமை இவ்வாறு இருக்க மேலே குறிப்பிட்ட கட்டண உயர்வு என்பது எங்களால் தாங்க இயலாத மாபெரும் சுமையாகும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
எனவே பல லட்சம் மோட்டார் வாகன தொழிலாளர்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு தாங்கள் நடவடிக்கை எடுத்து இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu