ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; கட்டட தொழிலாளி கைது

X
கைது செய்யப்பட்ட கருணாகரன்.
By - S.Gokulkrishnan, Reporter |29 Nov 2023 5:30 PM IST
ஈரோட்டில் ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் கேரளாவை சேர்ந்த 38 வயது பெண் பயணி ஒருவர் பயணம் செய்து உள்ளார். ரயில் சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த போது முன்பதிவு பெட்டியில் இருந்த பெண் பயணிக்கு வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (வயது 40) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயணி நடந்த சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகர் மூலம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கட்ட தொழிலாளியான கருணாகரனை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu