ஈரோடு மாவட்டத்தில் நேற்று 134.80 மி.மீ மழை பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 134.80 மி.மீ மழை பதிவு
X

ஈரோட்டில் மழை பெய்த போது எடுத்த படம். இடம்: அரசு தலைமை மருத்துவமனை ஈரோடு.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று 134.80 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகி உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று ஈரோடு நகரில் காலை முதல் வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் மாலை 4 மணியளவில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்ய ஆரம்பித்தது. இரவு சுமார் 7 மணி வரை மழை நீடித்தது. இதனால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. 5.30 மணி வரை 2 மணிநேரம் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ் வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் சோலார், லக்காபுரம், கஸ்பாபேட்டை, 46 புதூர், வெண்டிபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை 4 மணி முதல் ஆங்காங்கே சாரல் மழையும், ஒரு சில இடங்களில் லேசான கனமழையும் பெய்தது. இதனால் சோலார் சுற்றுவட்டாரத்தில் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. ஊஞ்சலூர், கருக்கம்பாளையம், தாமரைப்பாளையம், கொளத்துப்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று மதியம் 3 மணி முதல் சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. அதனை தொடர்ந்து மாலை 6 மணி வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

ஈரோடு மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: ஈரோடு 10, பெருந்துறை 17, கோபி 11.20, தாளவாடி 2, சத்தி 4, பவானிசாகர் 8, பவானி 2.40 கொடுமுடி 6.20. நம்பியூர் 9. சென்னிமலை 3, மொடக்குறிச்சி 5, கவுந்தப்பாடி 9.40. எலந்தக்குட்டை மேடு 9.60. அம்மாபேட்டை 12.40, கொடிவேரி 12, குண்டேரிப்பள்ளம் 9, வரட்டுப்பள்ளம் 4.60 மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மொத்த மழையின் அளவு 134.80 மி.மீ, சராசரி மழைப்பொழிவு 7.90 மி.மீ ஆகும்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil