அந்தியூரில் 13-ம் தேதி மாசிப் பட்டத்துக்கான பருத்தி ஏலம் துவக்கம்
கோப்பு படம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மாசிப் பட்டத்துக்கான பருத்தி ஏலம் வரும் 13ம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் மெ. ஞானசேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரோடு விற்பனைக் குழுவின் கீழ் செயல்படும் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் ஜூன். 13ம் தேதி முதல், மாசிப்பட்ட பருத்தி ஏல விற்பனை தொடங்குகிறது.
தொடர்ந்து வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மறைமுக பருத்தி விற்பனை நடைபெறும். இந்த பருத்தி ஏலத்தில், உள்ளுர் மற்றும் வெளியூர் மொத்த வியாபாரிகள், அறவை ஆலை மற்றும் நூற்பாலை உரிமையாளர்கள் அதிகளவில் பங்கேற்று கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால், விவசாயிகள் நன்கு முதிர்ந்த, மலர்ந்த, வெடித்த பருத்தியினை அதிகாலை நேரத்தில் பறித்து, நிழலில் உலர்த்தி, தூசு மற்றும் சருகுகள் நீக்கி, ரகம் வாரியாக தனித்தனியே பிரித்து மறைமுக ஏலத்திற்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் தங்களது விளை பொருளுக்கு சரியான எடை, போட்டி விலை, உடனடிப் பணத்துக்கு எவ்வித பிடித்தமும் இல்லாமல் நல்ல விலைக்கு விற்று பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu