கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவர் கைது

கோபி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 80 வயது முதியவர் கைது
X

கைது செய்யப்பட்ட முதியவர் ரங்கன்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் 80 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

கோபி அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் 80 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கடத்தூர் காவல் நிலைய பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 12 வயது மகள் வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த எலத்தூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கன் (வயது 80) என்பவர், சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்து உள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோபி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மேனகா ஆகியோர் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவர் ரங்கன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த ரங்கனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். சிறுமியிடம் சில்மிஷம் செய்ததாக 80 வயது முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story