கோபி அருகே ஓடத்துறையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்' வைப்பு

Erode news- கோபி அருகே உள்ள ஓடத்துறையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளில் ஆய்வு நடத்திய அதிகாரிகள்.
Erode news, Erode news today- கோபி அருகே உள்ள ஓடத்துறையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடைகள் மீது கடந்த சில நாள்களாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோபி அருகே உள்ள ஓடத்துறை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சுகாதாரத்துறையினர் போலீசாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது, அப்பகுதியில் பள்ளிக்கு அருகில் உள்ள கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அந்த கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், புகையிலை தடுப்பு சட்டம் மீறியதாக கடைக்கு ரூ.2,100 அபராதம் விதித்தனர்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட புகையிலை தடுப்பு நல ஆலோசகர் கலைச்செல்வி , சமூக சேவகர் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசுவாமி, சுகாதார ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், சங்கர், பாலமுருகன், ஜெகதீஷ், தினகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu