சென்னை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?

சென்னை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா?
X

சென்னை மாவட்ட புதிய ஆட்சியர் அருணா, முன்னாள் ஆட்சியர் அமிர்த ஜோதி.

சென்னை மாவட்ட ஆட்சியர் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன தெரியுமா? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்தஜோதி திடீர் என பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த அமிர்த ஜோதி நேற்று திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழக எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை இயக்குனராக இதுவரை பணியாற்றி வந்த அருணா சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்து உள்ளார்.

பொதுவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசு பணியாளர்கள் என்றாலும் மாநில அரசு நிர்வாக காரணங்களுக்காக அவர்களை பணி நியமனம் செய்வது மற்றும் இடம் மாறுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த மாதம் தான் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் .அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.பொதுவாக இது ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும் ஒரு பொதுவான சுழற்சி முறையிலான நடவடிக்கை தான். அந்த நடவடிக்கை ஏற்கனவே முடிந்து விட்டது.

இந்த நிலையில் தான் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் மட்டும் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஒன்பதாம் தேதி சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் இறங்கிய போது சுமார் ஒரு மணி நேரம் திடீர் என மின்சாரம் தடைப்பட்டது.

இதற்கு காரணம் மாநில அரசின் மின்வாரியம் தான் மத்திய அரசுடன் தமிழக அரசுக்கு உள்ள மோதல் போக்கின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என பாரதிய ஜனதா சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் இந்த மின்தடையை கண்டித்து மறியல் போராட்டமும் நடத்தினார்கள்.

மத்திய அமைச்சர் அமித்ஷா இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு பிரிவில் உள்ளவர் அவருக்கு பல்வேறு மிரட்டல்கள் இருப்பதால் அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். ஆனால் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்தடை ஏற்பட்டதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் என்ற அடிப்படையில் மத்திய அரசின் பாதுகாப்பு துறை கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கலாம் என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags

Next Story