/* */

பழனி தைப்பூச விழா: அதிகாரிகள்-பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம்

கொடியேற்றத்தைத் தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானைக்கு தீபாராதானை நடைபெற்றது

HIGHLIGHTS

பழனி தைப்பூச விழா:  அதிகாரிகள்-பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம்
X

பழனி தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பழனி பெரிய நாயகி அம்மன் கோவிலில் இன்று காலை 6.30மணிக்குமேல் யாகவேள்வியுடன் வேதமந்திரங்கள் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றிவைத்து பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி- வள்ளி,தெய்வானைக்கு தீபாராதானை நடைபெற்றது. பழனி தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லாமல் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இன்று முதல் 10நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் 6ம் நாளான 17ம்தேதி நடைபெறும். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம்,7ம்நாளான 18ம்தேதி நடைபெறும் திருத்தேரோட்டம் ஆகிய நிகழ்வுகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Updated On: 12 Jan 2022 9:15 AM GMT

Related News