/* */

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்

தொற்றுநோய் அதிகம் பரவல் குறைந்த அளவே மண்டகப்படிதாரர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது

HIGHLIGHTS

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா  கொடி ஏற்றத்துடன் தொடக்கம்
X

திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது

திண்டுக்கல் கோட்டைமாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மாசி திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை சாமி சாட்டுதல் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் கொடியேற்று நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு விஸ்வகர்ம மகாசபா நடத்தும் முதல் நாள், பொட்டுக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்காக, தங்கத்தாலி அபிஷேக பொருட்கள் ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வருவார்கள் அதனைத் தொடர்ந்து, கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் நெட்டு தெரு பகுதியைச் சேர்ந்த சாம்பா இன மக்களின் சார்பாக பாலகொம்பு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறும். சாம்பா இன மக்கள் பாலக்கோம்பை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதி வழியாக கொண்டு வந்தடைந்தவுடன் கொடிமரத்தில் கட்டப்பட்டதைத்தொடர்ந்து கோவிலில், கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க கோட்டைமாரியம்மன் உருவம் பொரித்த கொடியேற்ற நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடைபெறும் .

ஆயிரக்கணக்கில் குவிந்து இருந்து ஏராளமான பக்தர்கள் பார்க்க வேண்டிய இந்த கொடியேற்ற நிகழ்ச்சி கொரோனா என்ற தொற்றுநோய் அதிகம் பரவும் என்ற காரணத்தினால், குறைந்த அளவே மண்டகப்படிதாரர்கள் மட்டுமே கோவில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கொடியேற்று நிகழ்ச்சி தொடர்ந்து பக்தர்கள் இனி அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை குளிர்ந்த நீரைக் கொடிமரத்திற்கு ஊற்றுவார்கள்

தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமை ஆகிய மூன்று நாட்கள் ஆலயங்கள் மூடப்படுவது விலக்கி கொள்ளப்பட்ட காரணத்தினால் கோவிலில் எப்பொழுதும் போல் திருவிழாக்கள் நடைபெறும். மண்டகப்படி நடத்துபவர்கள் தினசரி மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் அம்மனின் வீதி உலா தேரோட்டம் நடத்திக் கொள்ளலாம். அதேபோல் கோவில் கலையரங்கத்தில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைகலை நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ள நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் தங்கள் வேண்டுதலையும் விரதமிருக்க காப்புக்கட்டிக் கொள்வார்கள். அதனைத் தொடர்ந்து தினசரி கோவில் வளாகம் முழுவதும் தீச்சட்டி எடுத்தல் , பால்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், அழகு குத்தி வலம்வருதல், கரும்புத்தொட்டில் எடுத்தல் என பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் கோவில் வளாகத்திற்குள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகின்ற வெள்ளிக்கிழமை முக்கிய நிகழ்வுகளான பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். வருடம் தோறும் இந்த பூக்குழி நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கான பேர் முன்பதிவு செய்து வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Updated On: 1 Feb 2022 12:15 PM GMT

Related News