நத்தம் அருகே பிளஸ் 1 மாணவி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

நத்தம் அருகே கிணற்றில் தவறி விழுந்ததில் பிளஸ் 1 மாணவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோட்டையூர் சின்னையம்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சரண்யா (வயது16). நத்தம் அரவங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டின் அருகே நடந்து சென்ற போது அருகிலிருந்த கிணற்றில் தவறி விழுந்தார். இதில் சரண்யா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரண்யா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுபற்றி நத்தம் காவல் ஆய்வாளர் தங்க முனியசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மின்தடை பற்றிய அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் நாளை (26.10.2023) வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, குரும்பபட்டி, வ.புதூர், பெரியூர்பட்டி, மாமரத்துப்பட்டி, கோவில்பட்டி, மல்லநாயக்கன்பட்டி, பந்திபொம்மிநாயக்கனூர், களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, பழனிபட்டி, அடைக்கனூர், தொண்டபுரி, மணக்காட்டுர், குடகிப்பட்டி, சிரங்காட்டுப்பட்டி, மங்களப்பட்டி, சொறிப்பாறைபட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் புதூர், பிள்ளையார்நத்தம், ராக்கம்பட்டி, வேப்பம்பட்டி, கோட்டைப்பட்டி, சரளைபட்டி, மாதவநாயக்கன்பட்டி, ஒத்தக்கடை, திருநூத்துப்பட்டி, போடிக்கம்பட்டி, சித்திரைகவுண்டன்பட்டி, ரெங்கையன்சேர்வைகாரன்பட்டி, மேட்டுப்பட்டி, நல்லபிச்சன்பட்டி, தட்டாமடைப்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu