/* */

அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்

அரசு ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டம்
X

ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் திண்டுக்கல்லில் 3ம் நாளாக தொடர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பொருளாளர் ராஜதுரை தலைமையில்,சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத கால நிலுவை தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் உள்ளிட்ட பணப்பயன்களை வழங்க வேண்டும்.ஆதிசேஷன் மாநில பணியாளர் சீரமைப்புப் பணிகள் பாதியிலேயே ரத்து செய்ய வேண்டும், ஒருங்கிணைந்த நிதி, மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (பிப் 4 ம் தேதி) தொடர்ந்து 3வது நாளாக சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி மற்றும் அனைத்து துறை ஊழியர்கள் என 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர். அதனை தொடர்ந்து பேருந்து நிலைய சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Updated On: 4 Feb 2021 8:15 AM GMT

Related News