கடலூர் அருகே கனமழையால் அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து தரை மட்டமானது
கடலூர் மாவட்டத்தில் பெய் கனமழையால் குறிஞ்சிப்பாடி அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது.
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வாணதிராயபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி செயல்பட்டு வருகிறது. 32 மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்தப் பள்ளியில் கட்டிடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது.கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் விடுமுறை விட்டுள்ளதால் உயிர் சேதம் ஏதும் இல்லை.
மேலும் நெய்வேலி சுரங்கத்தில் வெடி வைத்து நிலகரி எடுப்பதால் அந்த வெடியின் அதிர்வால் கட்டிடம் விழுந்துள்ளதாகவும் கூறபடுகிறது. தரமான முறையில் கட்டிடம் கட்டபடாததாலும் இந்த கனமழையில் பள்ளி கட்டிடம் விழுந்துள்ளதாகவும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu