சொகுசு பேருந்து தொழில்... உரிமையாளர்கள் படும் வேதனை

சொகுசு பேருந்து  தொழில்... உரிமையாளர்கள் படும் வேதனை
X

பைல் படம்

ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேரின் பயணங்கள் சிறக்க பாடுபடும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களை கொள்ளையர்கள் போல் பார்ப்பது வேதனை

சொகுசு பேருந்து உரிமையாளர்களின் வாழ்வாதாரம் சொகுசாக இல்லை. பண்டிகை காலம் வந்துவிட்டால் ஆம்னி பேருந்துகள் கொள்ளை அரசு கண்டு கொள்ளவில்லை என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் வருட 365 நாட்களில் இத்தொழிலை பற்றி எந்த விவாதமும் எழவில்லை. ஒரு சொகுசு பேருந்து வாங்குவதற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை ஆகிறது. குறைந்தபட்சம் ஒரு 50 லட்சம் ரூபாய் சொகுசு பேருந்து 500 கிலோ மீட்டர் இயக்கினால் நாள் ஒன்றுக்கு செலவாகிறது.

டீசல் 12,750.00, தமிழ்நாடு உரிமம் பேருந்துக்கு சாலை வரி 2500.00, வாகன காப்பீடு 250.00, பராமரிப்பு 1500.00, ஓட்டுனர் மற்றும் உதவியாளர் சம்பளம் 2000.00, தேய்மானம் 2100.00, வட்டி 1750.00, சுங்க கட்டணம் 1800.00, படுக்கை உறை விரிப்பு பராமரிப்பு 300.00, வாகன நிறுத்த கட்டணம் 200.00, பேருந்து நிலைய நுழைவு கட்டணம் 200.00, ஒரு பேருந்திற்கு ஆபீஸ் செலவு 1000.00.ஆக மொத்தம் ஒரு ஆம்னி பேருந்து 500 கிலோ மீட்டருக்கு இயக்க குறைந்த பட்ச செலவு ரூபாய் 26,350.00 இது இன்றைய டீசல் விலையில் ஏற்படுகிறது.

நாளுக்கு நாள் ஏறுமுகத்தில் டீசல் விலை...

ஆம்னி பேருந்துகளில் Non Ac Seater, Non Ac Sleeper, Ac Seater, Ac Slepper, Premium Ac Sleeper, Single Axle Volvo Seater, Multiaxle Volvo Seater, single axle Volvo Sleeper, Multi axle Volvo Sleeper ஆக 9 விதமான வசதிகள் படைத்த பேருந்துகள் உள்ளன இதில் குறைந்த குறைந்தபட்ச ஏசி ஸ்லீப்பர் பேருந்துக்கு இவ்வளவு செலவாகிறது.

இதில் வருட சராசரி 70% மட்டுமே பயணிகள் பயணம் செய்வர் ரூபாய்.1254.00 (26350.00 / 21 பயணிகள்) ஏஜென்ட் கமிஷன் 150.00 ஆக பேருந்து நிறுவனத்திற்கு ஆகும் அடக்கச் செலவு ஒரு பயணிக்கு ஒரு நாளுக்கு ரூபாய் 1404.00. வருடம் முழுவதும் இந்த தொகை வசூலித்தால் தான் அடக்க தொகையை அடைய முடியும். எதிர்பாராத விபத்துக்கள் அபரிதமாக விதிக்கப்படும் அபராதங்கள், பதிவுச் சான்று புதுப்பிப்பு, அனுமதி சீட்டு புதுப்பிப்பு என்று கட்டுக்கடங்காத செலவுகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்....

ஒரு பேருந்தை பராமரிப்பு மற்றும் வாகனப் பராமரிப்பு, FC வேலை பார்ப்பது என வருடத்தில் பல நாட்கள் பேருந்துகளும் இயக்க முடியாமல் போய்விடும். இந்தக் கொடிய நோய் காலத்திலும் எங்களுடைய பேருந்துகள் இயக்கப்படாமல் 500 நாட்களுக்கு மேல் நின்றுகொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு பேருந்திற்கு இந்த காலங்களில் வட்டி மட்டுமே சுமாராக 10 லட்சத்திற்கு மேல் நஷ்டமாக செலவாகிறது.

18 மாத காலங்களாக நிற்கும் பேருந்துகளை எடுத்து இயக்குவதற்கு குறைந்தபட்சம் 3 இலட்சத்திலிருந்து ஐந்து லட்சம் வரை செலவாகிறது.தக்காளி கிலோ ரூபாய்10லிருந்து 80 ரூபாய் ஆவதும், மல்லிகைப்பூ ரூபாய் 10லிருந்து 50 ஆவதும் இந்த500 சதவீதத்திற்கு மேல் விலை உயர்வை யாரும் அறிந்ததே.இருந்தும் விவசாயிக்கு அடுத்ததாக மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பது வாகன உரிமையாளர்களே . யானை கட்டி தீனி போடுவது போல் பராமரிக்கப்படும் இந்தத் தொழில் எதனால் கட்டணக் கொள்ளை என விமர்சிக்கப்படுகிறது ஆளும் அரசை விமர்சிக்கவா... இல்லை பேருந்து உரிமையாளர்களை விமர்சிக்கவா... கொள்ளை என கேட்கும்பொழுது உள் மனது வலிக்கிறது.



கொரோனா எனும் கொடிய நோயின் பிடியிலிருந்து நாடு மெல்ல மெல்ல மீண்டும் வரும் நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வாழ்வில் படும் துயரங்களை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ஜாம்பவான்களாக இந்த தொழிலை செய்துகொண்டிருந்த எத்தனை உரிமையாளர்கள் தொழிலை விட்டும் உலகைவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள் என்று நாடு அறிந்ததே.

இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் முனைவர் அ. அன்பழகன் கூறியதாவது: இந்தத் தொழிலை நேசித்தும், மக்களின் வசதிக்காகவும் சமூக சிந்தனையோடு செய்து கொண்டிருக்கும் உரிமையாளர் எண்ணற்றவர்கள் எல்லா தொழில்களிலும் இருக்கின்றனர் மற்ற தொழில்களில் இருப்பவர்களைப்போல, எங்கள் தொழிலிலும் ஒரு சில கயவர்கள் இருக்கலாம்.

அதற்காக ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பயணிகளின் பயணங்களை சிறக்க இரவு பகலாக பாடுபடும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கொள்ளையர்கள் போல் பாவிப்பது வேதனையின் உச்சம்.டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் ஆம்னி பேருந்துகளை இனிவரும் காலங்களில் இயக்குவது கேள்விக்குறிதான் என்றார் அவர்.


Tags

Next Story