அ.தி.மு.க.வில் இணைந்தார் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வின் மருமகன்

பா.ஜ.க. மாநில ஓபிசி அணி துணைத் தலைவர் ஆற்றல் அசோக்குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
பா.ஜ.க. ஓபிசி அணி மாநில துணை தலைவர் அசோக்குமார் அக்கட்சியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
பா.ஜ.க. மாநில ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்டோருக்கான) அணி துணை தலைவர் ஆற்றல் அஷோக் குமார். இவர், மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மருகனும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் சவுந்தரத்தின் மகனும் ஆவார். இவர் மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட திட்டமிட்டு பணிகளை செய்து வந்துள்ளார்.
எப்படியும் சீட் வாங்கிவிடலாம் என தொகுதி முழுவதும் சென்று ஏராளமான நலத்திட்ட உதவிகளை அசோக்குமார் செய்து வந்தார். மேலும், ஈரோடு தொகுதியை குறிவைத்து கடந்த 2 ஆண்டுகளாக கோடிக்கணக்கில் ஆற்றல் அசோக்குமார் செலவழித்து வந்தார். மேலும், ஆற்றல் என்ற அறக்கட்டளை மூலம் ஈரோடு பகுதியில் உள்ள கிராமங்களில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பான அமெரிக்காவின் பிரபலமான சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றி வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சென்னை பசுமை வழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையுடனான கருத்து வேறுபாட்டால் தாம் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததாக அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu