உடையார்பாளையம் பேரூராட்சியில் யார் எந்த வார்டில் போட்டியிடலாம்?

உடையார்பாளையம் பேரூராட்சி நகர்புற சாதாரண உள்ளாட்சி தேர்தல்-விபரம்
2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 12688. இப்பேரூராட்சியின் மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 15. மொத்த குடியிருப்பு எண்ணிக்கை 3157. வார்டுகளின் சராசரி மக்கள் தொகை 846. வார்டுகளின் சராசரி குடியிருப்புகளின் எண்ணிக்கை 210. ஒரு குடியிருப்பின் சராசரி மக்கள் தொகை 4.01 (4 நபர்கள்).
மறுவரை செய்யப்படும் வார்டுகளின் எண்ணிக்கை வார்டு எண்.1 முதல் 15 வார்டுகள்.
தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு (பொது) 2 (வா.எண்.11,14), தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு (பெண்கள்) 2 (வா.எண்.2,15).
பெண்களுக்கான இட ஒதுக்கீடு 6 (வா.எண்.1,4,5,7,10,13).
பொது பிரிவு 5 (வா.எண்.3,6,8,9,12).
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 10084. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4983. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 5101.
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 15, அனைத்து வாக்குச்சாவடிகள் 15.
வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியிட்ட நாள் 07.11.2021. வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்ட நாள் 09.11.2021.
வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் இடம் உடையார்பாளையம் பேரூராட்சி அலுவலகம்.
புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாள் 09.12.2021 மற்றும் 05.01.2022.
தேர்தல் நடத்தும் அலுவலர் உடையார்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி
பேரூராட்சி தலைவர் பதவி - பெண் (பொது).
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu