/* */

கூட்டணி தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற ம.தி.மு.க வேட்பாளர் சின்னப்பா

அரியலூர் ம.தி.மு.க.வேட்பாளர் கூட்டணி கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார்

HIGHLIGHTS

கூட்டணி தலைவர்களிடம் வாழ்த்து பெற்ற  ம.தி.மு.க வேட்பாளர் சின்னப்பா
X

அரியலூர் : அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளர் கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அரியலூர் சட்டமன்றத் தொகுதிக்கு திமுக கூட்டணியில் மதிமுக வேட்பாளராக களமிறங்கும் வழக்கறிஞர் சின்னப்பா, மதிமுக கட்சி தலைவர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக துணைப்பொதுச்செயலாளர் ராசா, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு திமுக கூட்டணியின் சார்பில் அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சின்னப்பா வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் அரியலூர் மாவட்டத்தில் திமுகவில் முன்னணித் தலைவராக திகழ்ந்தார். பின்னர் திமுகவிலிருந்து வைகோ விலகிய பிறகு அவருடன் இணைந்து அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக பல வருடங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்பொழுது மதிமுகவில் தலைமை உயர்நிலைக் குழு உறுப்பினராக உள்ளார். கடந்த 1991ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக அரியலூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 1196 மற்றும் 2001 ஆகிய தேர்தல்களில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கு மதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.

இவர் திமுக மாணவர் பிரிவில் 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், எமர்ஜென்சி காலத்திலும் சிறைவாசம் சென்றுள்ளார். மேலும் மதிமுக சார்பில் நடைபெற்ற இலவச மின்சாரம் ரத்து மற்றும் இட ஒதுக்கீடு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைவாசம் பெற்றுள்ளார். மக்களிடம் அன்பு கொண்டவராகவும் நல்ல செல்வாக்கு பெற்றவராகவும் விளங்குவதோடு நீண்டகாலமாக வழக்கறிஞர் பணிகள் உள்ளதால் மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்துள்ள இவருக்கு, அதிக வாக்கு சதவீதம் உள்ள சமூகத்தின் வாக்கு வங்கியும் உதயசூரியன் சின்னத்தில் இருப்பதும் இவருக்கு கூடுதல் பலமாக உள்ளது.

இவருக்கு மரகதம் என்ற மனைவியும் அருள்செல்வன் பாலசந்தர் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

அரியலூர் சட்டமன்ற தேர்தலில் மதிமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள சின்னப்பா இன்று அரியலூரில் முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுவதோடு, தனது தேர்தல் அலுவலகத்தையும் இன்று திறந்து வைத்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரிக்க உள்ளார்.




Updated On: 13 March 2021 7:40 AM GMT

Related News