mole sastram in tamil-இடது கன்னத்தில் மச்சம் உள்ள பெண்கள் எப்படி இருப்பார்கள்..? தெரிஞ்சுக்கங்க..!

mole sasthram in tamil for women-பெண்களின் முகத்தில் உள்ள மச்சத்தின் பலன்கள்.(கோப்பு படம்)
பெண்களுக்கு முகத்தில் மச்சம் இருப்பது சிலருக்கு அழகை கூட்டும். சில மச்சங்கள் பெண்களை வசீகரமாக்கும். ஆண்கள் பார்த்தால், அடடா இவளைப்போல ஒரு பெண் மனைவியாக வேண்டும் என்று மனதுக்குள் நினைப்பார்கள். அந்த அளவுக்கு மச்சம் உச்சம் தொடும் வேலைகளை எளிதாக செய்துவிட்டு அமைதியாக இருக்கும். மச்சம் பெண்களின் திருஷ்டிப்பொட்டு..!
பொதுவாகவே பெண்களுக்கு முகத்தில் எங்கு மச்சம் இருந்தால் அவர்களுக்கு என்ன பலன் கிட்டும்? அது ஆண்களுக்கு எப்படியான பலன்களைத் தரும் என்று பார்ப்போம்.
mole sastram in tamil
தலை பகுதியில் அதாவது முகத்தில் மச்சம் உள்ள பெண்களுக்கான பலன்கள் குறித்த விளக்கம் :-
தலையில் மச்சம் உள்ள பெண்கள் பேராசை மற்றும் பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
புருவங்களில் மச்சம் உள்ளவர்கள் ஆடம்பரமாய் இருக்க விரும்ப மாட்டார்கள்.
நெற்றி நடுவே மச்சம் உள்ள இவர்கள் புகழ், பதவி, அந்தஸ்து ஆகியவற்றில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள்.
mole sastram in tamil
நெற்றியின் வலதுபுறம் மச்சம் உள்ள பெண்கள் நல்ல தைரியசாலிகளாக இருப்பார்கள்.
நெற்றியின் இடதுபுறம் மச்சம் உள்ளவர்கள் அதிக முன்கோபம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
வலது கண்ணில் மச்சம் உள்ள பெண்களுக்கு வீண் பகட்டு பிடிக்காது.
இடது கண்ணில் மச்சம் உள்ள பெண்கள் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
உதட்டில் மச்சம் உள்ளவர்கள் இயற்கை விரும்பிகளாக இருப்பார்கள்.
மேல் உதட்டில் மச்சம் உள்ள பெண்களுக்கு அனாவசிய செலவுகள் செய்ய பிடிக்காது.
கீழ் உதட்டில் மச்சம் உள்ள பெண்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள்.
தாடையில் மச்சம் உள்ளவர்கள் தேனீ போல சுறுசுறுப்புடன் இயங்குவார்கள்.
mole sastram in tamil
மூக்கின் மேல் மச்சம் உள்ள பெண்கள் உயர்ந்த செயல்திறன், பொறுமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மூக்கின் வலதுபுறம் மச்சம் உள்ளவர்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதை கணிக்க முடியாதவர்களாக இருப்பார்கள்.
மூக்கின் இடதுபுறம் மச்சம் உள்ள பெண்களுக்கு கூடா நட்பு ஏற்பட்டு சக பெண்களால் அவமானம் ஏற்படும் நிலை வரலாம்.
மூக்கின் நுனியில் மச்சம் உள்ள பெண்களுக்கு வசதியான வாழ்க்கையும், வாழ்க்கையில் திடீர் ஏற்றங்களும் ஏற்படலாம்.
மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் உள்ளவர்கள் ஒழுக்கம் மற்றும் உயர்ந்த குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
மேல் வாய் பகுதியில் மச்சம் உள்ளவர்களுக்கு அமைதி மற்றும் அன்பான கணவர் அமைவார்.
இடது கன்னத்தில் மச்சம் உள்ள பெண்கள் விடாப்பிடியான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
mole sastram in tamil
வலது கன்னத்தில் மச்சம் உள்ள பெண்களுக்கு நல்ல வசதியான வாழ்க்கை அமையும்.
காதில் மச்சம் உள்ள பெண்கள் வாழப் போகும் வீடு சகல வசதிகளும் நிறைந்ததாக இருக்கும்.
காதின் பின்புறம் மச்சம் உள்ள பெண்கள் கைகளில் பணம் சரளமாக புழங்கும்.
வலது காதின் முனையில் மச்சம் உள்ள பெண்கள் பயந்த சுபாவம் கொண்டவர்களாக கொண்டவர்கள்.
இடது காதின் முனையில் மச்சம் உள்ள பெண்கள் பெரும் செலவாளிகளாக இருப்பார்கள்.
நாக்கில் மச்சம் உள்ள பெண்கள் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.
நாக்கின் அடிப்பாகத்தில் மச்சம் உள்ள பெண்கள் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu