krishna jayanthi quotes in tamil-கண்ணன் பிறந்தான்..இன்று கண்ணன் பிறந்தான்..! கவலைகள் காணாமல் போகும்..!

krishna jayanthi quotes in tamil-கிருஷ்ண ஜெயந்தி (கோப்பு படம்)
krishna jayanthi quotes in tamil
கிருஷ்ணரின் பிறப்பைக் குறிப்பதே கிருஷ்ண ஜெயந்தி விழாவாகும். ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படும் ஒரு இந்து திருவிழா கிருஷ்ண ஜெயந்தி ஆகும். சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி என்று இது அழைக்கப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் இந்த நாளில் நோன்பு மேற்கொண்டு கடவுளை வணங்குவதற்காக தங்கள் வீடுகளை அலங்கரித்து கோவில்களுக்குச் சென்று கிருஷ்ணரை வழிபடுகின்றனர். மேலும் பிரசாதம் வழங்குவதன் மூலமும், ஏழைகளுக்கு நன்கொடை அளிப்பதன் மூலமும் இந்த விழாவை சிறப்பாக்குகிறார்கள்.
krishna jayanthi quotes in tamil
பகவான் கிருஷ்ணர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். மதுராவின் குடிமக்களை தீய மன்னன் கன்சாவிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு, தேவகி மற்றும் வாசுதேவன் ஆகியோருக்கு மகனாக பிறக்கிறார் கிருஷ்ணர். பாரதப் போரில் வெற்றிபெற பாண்டவர்களுக்கு உதவுவதில் பகவான் கிருஷ்ணரும் முக்கிய பங்கு வகித்தார்.
பகவான் கிருஷ்ணர் பிறந்தநாளான கிருஷ்ண ஜெயந்தி அன்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் கூறும் வகையிலான சில அழகான மேற்கோள்களை தந்துள்ளோம்.
- மகாவிஷ்ணுவின் 9 வது அவதாரமாகிய கிருஷ்ணர். பூமியில் மகா விஷ்ணுவாக பிறந்த தினமே கிருஷ்ண ஜெயந்தி. இந்த நன்னாளில் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகள்...!
- அனைவரின் இல்லத்திலும் கிருஷ்ணரின் பொற்பாதங்கள் தவழட்டும். செழிப்பான வாழ்க்கை மலரட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
- உங்கள் கோரிக்கைகளை, வேண்டுதல்களை, தேவைகளை கண்ணனிடம் கூறுங்கள். அவர் அவைகளை நிறைவெற்றித் தருவார். இனிய கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துகள்...!
- கண்ணனின் உள்ளத்தில் இருக்கும் அன்பைப்போல உங்கள் உள்ளத்திலும் அன்பு பொங்கி இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
krishna jayanthi quotes in tamil
- எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் வருவேன் என்றார், கிருஷ்ணர். உங்களுக்கு எதிரான தீயவைகளை கிருஷ்ணரிடம் முறையிடுங்கள். தீமைகளை அழித்து உங்களுக்கு நன்மைகள் கிடைக்கச் செய்வார். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...!
- நல்லவர்களை காத்து, தீயவர்களை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட கண்ணன் பிறந்தான்.அந்த நாளில் உலகுக்கே ஒளி கிடைத்தது. உங்களுக்கும் வழி திறப்பார். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்.
- தர்மத்தைக் காக்க பாரதப் போரில் நின்றார். அநீதி கண்டு பொங்கி நின்றார். இறுதியில் தர்மத்தை நிலைநாட்டி அதர்மத்தை அழித்தார், மகா விஷ்ணு. இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...!
- கண்ணா, உன்னிடம் சரணடைந்தவர்கள், எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். உன் காந்தப்பார்வை ஒன்றிலே தீமைகள் அழிந்துபோகும். உன்னை நாடியோருக்கு அருள்வாய் கண்ணா..! கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்...!
krishna jayanthi quotes in tamil
- உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்...!
- கிருஷ்ணர் எப்போதும் உங்களை மகிழ்ச்சியுடனும், அன்பு மற்றும் அமைதியுடன் இருக்க ஆசீர்வதிப்பார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
- உங்கள் கவலைகள் அனைத்தையும் இந்த நாளில் கிருஷ்ணரிடம் விட்டு விடுங்கள். அவர் உங்களை கவனித்துக்கொள்வார். உங்களுக்கு வளமான வாழ்வளிப்பார். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
- உங்கள் வாழ்க்கையில் அன்பு, மகிழ்ச்சி, அரவணைப்பு மற்றும் செல்வம் ஆகியவை கிருஷ்ணரின் அருளால் கிடைக்கும். அவரின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும். இனிய கிருஷ்ண ஜெயந்தி..!
krishna jayanthi quotes in tamil
- இந்த புனித நாளில்தான் மனித இனத்தைக் காப்பாற்றுவதற்காக பகவான் கிருஷ்ணர் அவதரித்தார். அரக்கர்கள் அழிந்து போனதுபோல தீமைகளை க்ரிஷ்னர் கொள்வார். இன்று அவர்மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவோம். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
- கிருஷ்ணரின் ஆசீர்வாதம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும், ஆரோக்யத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும்.! ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்தி.
- கிருஷ்ணர் கீதையில் கற்பித்த பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், எப்போதும் தர்மத்தின் வழியைப் பின்பற்றுங்கள். நல்லதே நடக்கும். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
- எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். அதை மனதில் கொள்ளுங்கள். வாழ்க்கை சிறக்கும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
krishna jayanthi quotes in tamil
- கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே. எல்லோருக்கும் நல்லதே செய்யுங்கள், அவர் உங்களுக்கு பகைவர் ஆனாலும். மகா விஷ்ணு உங்களுக்கு நல்வழி காட்டுவார். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
- எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறு ஒருவருடையதாகும். அதானல் ஆசையை விட்டொழியுங்கள். எது தேவையோ அதைமட்டும் கேளுங்கள். கிருஷ்ணர் அள்ளித்தருவார். இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
- சுய அழிவுக்கான நரகத்திற்கு மூன்று வாயில்கள். அவை காமம், கோபம் மற்றும் பேராசை. இந்த மூன்றையும் கைவிடுங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்..!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu