கண்ணில் மாவிளக்கு.. புற்று மண்ணில் பிசைந்த அம்மன்..!!

கண்ணில் மாவிளக்கு.. புற்று மண்ணில் பிசைந்த அம்மன்..!!
X
Punnainallur Mariamman Temple History in Tamil-தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் வரலாறு பற்றி பார்க்கலாம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் என்னும் ஊரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

Punnainallur Mariamman Temple History in Tamil

தஞ்சை நகரிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் புன்னைநல்லூரில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து அடிக்கடி பேருந்து போக்குவரத்து வசதி உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று வடிவமாக தோன்றி சுயம்பு மூர்த்தியாக காணப்படுவது தனி சிறப்பாகும்.

ஆகையால், இத்தலத்தில் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, சந்தனம், குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கோரோசனை, அகில் போன்ற பலவித மூலிகை மருந்துகள் கொண்டு புற்று மண்ணில் பிசைந்து உருவாக்கப்பட்டவர் இத்தல மூலவரான அம்மன்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் விநாயகர், முருகர், காத்தவராயர், அய்யனார், பேச்சியம்மன், லாட சன்னாசி, மதுரை வீரன் ஆகியோருக்கும் சன்னதிகள் அமைந்துள்ளது. முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்கும் தனி சன்னதி உள்ளது. இரு அம்மன்களும் அருகருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.

அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு பெருவிழா நடைபெறும்.ஆவணி மாதம் கடைசி ஞாயிறு தேரோட்டம் நடைபெறும்.

ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் மாவிளக்கு எடுப்பது, உப்பு, மிளகு இடுவது, அக்னி சட்டி எடுப்பது, கோயில் தீர்த்தமான வெல்லக் குளத்தில், வெல்லம் வாங்கி போடுவது போன்ற பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது.இத்தலத்தில் அம்மனை வணங்கி புற்றுமண் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும்.அம்மை கண்டு அவதிப்படும் பக்தர்கள், கண் வியாதிகள் கொண்டவர்கள் இங்கு வந்து தங்கியிருந்து குணம் அடைந்து செல்கிறார்கள்.

கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர்.உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக் குளத்தில், வெல்லம் வாங்கிப் போடுவது போன்ற நேர்த்திக்கடன்கள் செய்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story