சிவராஜ் சிங் சவுகானிற்கு கல்தா: ம.பி. முதல்வராகிறார் மோகன் யாதவ்

சிவராஜ் சிங் சவுகானிற்கு கல்தா: ம.பி. முதல்வராகிறார் மோகன் யாதவ்

சிவராஜ் சிங் சவுகானுடன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோகன் யாதவ்.

சிவராஜ் சிங் சவுகானிற்கு கல்தா கொடுக்கப்பட்டு உள்ளது. ம.பி. முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 3 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானிற்கு கல்தா கொடுப்பப்பட்டது. புதிய முதல்வராக மோகன் யாதவ் பதவி ஏற்க உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வின் முகமாக அறியப்பட்ட 3 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு மீண்டும் முதல்வர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் நவம்பர் 17-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மத்திய பிரதேசத்தில் கருத்து கணிப்புகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி பா.ஜ.க. 163 இடங்களில் அபார வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் கட்சியோ வெறும் 66 இடங்களில்தான் வென்றது. இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது.

மத்திய பிரதேச தேர்தல் முடிவுகள் வந்தது முதலே யார் அடுத்த முதல்வர் என்ற விவாதம் எழுந்தது. முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தமக்குதான் முதல்வர் பதவி கிடைக்கும் என உறுதியாக நம்பினார். அதைவிட தமக்குத்தான் பா.ஜ.க. மேலிடம் முதல்வர் பதவியைத் தர வேன்டும் என விரும்பினார். இதனால் டெல்லி மேலிடம் அழைத்த போதும் அங்கு செல்ல மறுத்தார். அதே நேரத்தில் மத்திய பிரதேச முதல்வர் பதவிக்கு பலரும் முட்டி மோதிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் போபாலில் இன்று மத்திய பிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மோகன் யாதவ், மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிவராஜ் சிங் சவுகான் அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் மோகன் யாதவ். சிவராஜ் சிங் சவுகானுக்கு முதல்வர் பதவி மறுக்கப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 3 முறை முதல்வராக இருந்து பாஜகவின் இமாலய வெற்றிக்குக் காரணமாக இருந்த சிவராஜ் சிங் சவுகானை பாஜக மேலிடம் புறக்கணித்தது தவறு என கோபத்துடன் கொந்தளிக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

ஆனாலும் பாரதிய ஜனதாவை பொறுத்தவரை வாரிசு அரசியல் மற்றும் ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் பதவிகள் கூடாது என்பதை கொள்கையாக கொண்டு இருப்பதால் இந்த பிரச்சினை அங்கு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படாது என்றே கருதப்படுகிறது.

Tags

Next Story