முக அழகை கெடுக்கும் மங்கு..! எப்படி நீக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
melasma treatment in tamil-மங்கு நீங்க எளிமையான வைத்தியம் (கோப்பு படம்)
Melasma Treatment in Tamil-Melasma என்று ஆங்கிலத்தில் சொல்லக்கூடிய இந்த மங்கு முகம் மற்றும் மூக்கு பகுதிகளில் அதிகமாக வரும் காரணம் அதிக வெயில் படக்கூடிய இடங்களில் வருகிறது. குறிப்பாக வெயிலில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
முகத்தில் மூக்கு மற்றும் கன்னப்பகுதிகளில் இந்த மங்கு அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிகமாக வரலாம். இது கருப்பாக கன்னப்பகுதியில் கருப்பாக படிந்து காணப்படும். பெண்களின் முக அழகுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். சில பெண்கள் மன அளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
மங்கு என்பது ஒரு நோய் அல்ல. தேமல், முகப்பரு போலவே இதுவும் தோலில் ஏற்படும் ஒரு குறைபாடு. இதை சில எளிய முறைகளில் நாம் நீக்கலாம். பெண்களுக்கு அதிகம் வருவதற்கான காரணம் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகள் தான். சரியான இடைவெளியில் மாதவிடாய் வராதவர்கள், மெனோபாஸ் என்று சொல்லக்கூடிய மாதவிடாய் நிற்கும் காலங்களில் உள்ள நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் போன்றவர்களுக்கு இந்த மங்குவருவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.
இயற்கையான பொருளைக்கொண்டு இந்த மங்குவை நீக்கிவிடலாம். எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் ஜாதிக்காய் கிடைக்கும். அல்லது ஜாதிக்காய் பொடி வடிவத்திலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
ஜாதிக்காய் பொடி
தேன்
கற்றாழை (ஜெல்)
காய்ச்சாத பசும்பால்
தயார் செய்யும் முறை
2 டீஸ்பூன் ஜாதிக்காய் பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் காய்ச்சாத பசும்பால் சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்ட் போல குழைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை
இவ்வாறு தயார் செய்த பேஸ்ட்டை மங்கு உள்ள இடத்தில் நன்றாக பூசுங்கள். ஒரு மணி நேரம் கழித்து அந்த பேஸ்ட் மீது கையை வைத்து வட்ட வடிவத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். ஒரு 10 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடுங்கள். முகம் இப்போது ஃபிரெஷ்ஷாக இருக்கும்.
மங்கு நிறைய இருந்தால் தொடர்ந்து ஒரு வாரமாவது பயன்படுத்தவேண்டும். சிலருக்கு நீண்ட நாட்களான மங்காக இருக்கும். அதற்கு விடாமல் ஒருவாரம் பூசிவர மங்கு மறையத் தொடங்கும். மறைய தொடங்கியதும் வாரம் இரண்டு அலலது மூன்று முறை பயன்படுத்தலாம். இதற்கு நல்ல பலன் கிடைக்கும்.
ஜாதிக்காய் மட்டுமே கடையில் வாங்கவேண்டிய பொருள். மற்ற பொருட்கள் வீட்டிலேயே கிடைக்கும் பொருட்கள். அதனால் இந்த எளிய முறையை பயன்படுத்தி உங்கள் முகத்தில் இருக்கும் மங்குவை நீக்க முயற்சி செய்யுங்கள். இதனால் எந்த எதிர்விளைவுகளும் இல்லை.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu