வாழ்க்கைன்னா என்னங்க..? புரிஞ்சா வாழ்க்கை இனிக்கும்..! வாழ்க்கை கவிதைகள்..!

Tamil Patriya Kavithaigal
X

Tamil Patriya Kavithaigal

Tamil Patriya Kavithaigal-வாழ்க்கையை அனுபவித்து வாழ பணம் மட்டுமே முக்கியம் இல்லீங்க. மனமே முக்கியம். மாளிகையில் வாழ்வதால் மட்டுமே மகிழ்ச்சி வந்துவிடாது.

Tamil Patriya Kavithaigal

வாழ்க்கைப் பற்றிய கவிதைகள் இங்கு தரப்பட்டுள்ளன. வாழ்க்கை என்பது என்ன..? பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட பயணமே வாழ்க்கை. அதை இன்பமாக்கிக்கொள்வதும் துன்பமாக்கிக்கொள்வதும் நம் கையில் மட்டுமே உள்ளது. எது எமக்கு தேவை என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

  • தற்காலத்தில் எதிரிகளிடம் கூட அளவோடு எதிர்ப்பைக்காட்டுங்கள்..ஏனெனில் எதிரி ஒருநாள் நண்பராக மாறலாம்..! அதேபோல நண்பரிடமும் அளவோடு நட்பைக்காட்டுங்கள்..! ஏனெனில் ஒருநாள் நண்பனும் எதிரி ஆகலாம்..!
  • உறவுகள் தூக்கி எறிவதை எண்ணி வருந்தாதே..! அவர்கள் முன் உன் திறமையைக்காட்டி வாழ்ந்து காட்டு..! அதுவே உனக்கான மகிழ்ச்சி, நிம்மதி..!
  • முட்டாள்களின் அரசாட்சியில் அறிவாளிகளுக்கு என்றைக்குமே இடம் கிடைக்காது..முட்டாள்களின் கணக்குப்படி அறிவாளிகள் பைத்தியக்காரர்கள்..!
  • நீ ஒவ்வொரு முறை வாழ்க்கையில் வரும் போதும் எனக்கு நிறைய அனுபவங்களைக் கற்றுத் தருகிறாய்..! இருப்பினும் ஏனோ எனக்கு உன்னை பிடிப்பது இல்லை. நீ தான் வெற்றியின் முதல் படி என்பதை நான் அறிவேன்..இருப்பினும் "தோல்வி" என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை..! நீ எனக்கு ஆசான்..!
  • எதிரில் நிற்பது எவ்வளவு பெரிய அறிவாளியாக இருப்பினும் அவர் யார் என்பது முக்கியமில்லை. நாம் எப்படி அவரை எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே முக்கியம்..!
  • தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் வாக்கியங்கள் முழுமை பெறுவதில்லை..! இல்லை எனில் வார்த்தையும், வாழ்க்கையும் அர்த்தமில்லாமலேயே போய்விடும்..!
  • ஒருவேளை "நான் யார் தெரியுமா?" என்ற கேள்வி கேட்கும் நிலை வந்தால், அந்த கேள்வியை முதலில் நீ உன்னிடம் கேட்பதே ஆகச் சிறந்ததாக்க இருக்கும்..! நீ உன்னை அறிந்துகொள்ளும் ஒருவழி..!
  • வாழ்க்கைப் பாதையில் கஷ்டங்கள் வந்து கொண்டே தான் இருக்கும். அதை கடந்து செல்வதே எதிர்நீச்சல் போடுபவருக்கு சோர்ந்து போகாத சூட்டுகோலாக இருக்கும்..!
  • இல்லாத சில விஷயங்களை நினைத்து நினைத்தே இருக்கின்ற பல நல்ல விஷயங்களை இழந்து விடுகிறோம். பின்னர் ஏன் இல்லாத விஷயங்கள் குறித்து கவலைப் படுவானேன்..!?
  • "உன் வாழ்க்கை உன் கையில்" என்பதை நீ புரிந்துகொள்ளும் வரை, வாழ்க்கை என்னும் ஆசான் பாடம் நடத்துவதை நிறுத்துவதில்லை..! உனக்கான போதனைகள் தொடரும்..உன்னையே நீ அறியும் வரையிலும்..!
  • ஓவர் நைட்ல ஒருவரும் ஒபாமா ஆகிவிட முடியாது. அதற்கு பயிற்சி,முயற்சி, உழைப்பும் அதற்கான காலமும் தேவை...!
  • மற்றவர் அஞ்சும்படி வாழ்வது வாழ்க்கை அல்ல. மற்றவர் கொஞ்சும்படி வாழ்வது தான் வாழ்க்கை....!
  • நமக்கு குழி பறிக்க வெளியில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. நாம் விட்டுச்செல்லும் கவனப் பிழைகள் போதும்..! அலட்சியமே கவனக்குறைவைக் கொண்டுவரும்..!
  • இன்பமும் துன்பமும் ஆற்று வெள்ளம் போன்றது. நிலையாக நிற்காது ஓடி விடும். ஆனால் உண்மையில் தேவையானது அன்பு மட்டுமே. அன்பு கொண்ட உள்ளம் மட்டுமே..!
  • கரையை தொட்டுச் செல்லும் அலைகளுக்குத் தெரிவதில்லை, சில சுவடுகளை விட்டுச் செல்கிறோம் என்று..! நாம் வாழ்வது முக்கியமல்ல..! நாம் வாழ்ந்ததற்கான அடையாளங்களே நம்மை பேசவைக்கும்..!
  • பயண முடிவில் கிடைக்கும் இருக்கை போன்றது வாழ்க்கை...! ஓடி ஓடி உழைத்து திரும்பிப்பார்த்தால் உட்கார்ந்து சாப்பிடும் போது முடிந்து விடுகிறது வாழ்க்கை..!
  • கடந்து சொல்வதெல்லாம் ஏதோ ஒன்றை கற்றுத் தராமல் போவதில்லை. ஆனால் அதை நாம்தான் கவனிப்பதில்லை..! அவைகளில் மாற்றங்களும் உள்ளன..! ஏமாற்றங்களும் உள்ளன.!
  • இருக்கும் போது மரியாதை வேண்டும் என்றால், ஒருவரிடம் பணம் இருக்க வேண்டும்..! இறந்த பின்னர் மரியாதை வேண்டும் என்றால் அவருக்கு நல்ல குணம் வேண்டும்..!
  • கஷ்டங்கள் வரும்போது எதிர்நீச்சல் போடத் தெரியாதவனுக்கு வாழ்க்கையில் நீச்சல் தெரிந்தும் என்ன பயன்..!?
  • வாக்கியங்களில் உள்ள எழுத்துப் பிழையை சரி செய்துவிடலாம். வாழ்க்கையில் உள்ள பிழை என்பதை தலை எழுத்து என்று எண்ணி ஏமாந்துவிடாதே..! வாழ்வது ஒரு முறை..வாழ்க்கையை வாழ்க்கையாக வாழ்..!
  • வானத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் பறக்கின்றன..! ஆனால் இதுவரை ஒன்றுடன் ஒன்று முட்டிக் கொண்டதாக சரித்திரம் இல்லை. ஆனால்.. ஆறறிவு எங்கே..? ஐந்தறிவு எங்கே..?
  • வாழ்க்கையில் யாரையும் மிகையாகவோ அல்லது குறையாகவோ எடை போட்டுவிடாதீர்கள்..! உலகத்தையே மூழ்கடிக்கும் கடலால் கூட ஒரு துளி எண்ணெயை மூழ்கடிக்க முடியாது..!
  • தத்துவத்தை படிச்சா என்னடா வாழ்க்கை இதுன்னு தான் தோணும்..! அதே தத்துவத்தை புரிந்துகொண்டால் இதான் வாழ்க்கை. நாம் வாழப் பழக வேண்டும் என்று தோன்றும்..!
  • ஒரு பழத்தில் எத்தனை விதைகள் என்று கூட எண்ணி சொல்லி விடலாம். ஒரு விதையில் எத்தனை பழங்கள் தோன்றும் என்று சொல்ல முடியாது. நிகழ்காலத்தை நினைத்து கவலையும் கொள்ளாதே..! எதிர்காலத்தை நினைத்து அச்சமும் கொள்ளாதே..! வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து பார்..!
  • நடக்கும்போது செருப்புக்குள் சிக்கிய கல்லும், வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும் உறுத்திக் கொண்டே தான் இருக்கும். அதை நீங்கள் உதறித் தள்ளும் வரை...! உதாசீனப்படுத்தும் தான் வீறுகொள்ளவேண்டும்..!
  • திறக்க முடியாத பூட்டு என்று எதுவும் இல்லை. தீர்க்க முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. பூட்டுக்கு சரியான சாவியை பயன்படுத்துவதுபோல துன்பத்துக்கு சரியான தீர்வை கண்டு பிடிகப்பவரே சரியான சாவியை கண்டு அடைந்துள்ளார் என்பது பொருளாகிறது..!
  • கடவுள் இல்லை என்று சொன்னாலும் மரணம் இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. அப்போ கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பவர்களுக்கு எல்லாமே நம் நம்பிக்கை தான் கடவுள்...!
  • வலியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும், வாழ வழியின்றி சிரிக்கும் சிரிப்பிற்கும் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன..! வலிகளை சுமப்பவன் ஞானியாகிறான்..! வழியைத் தேடும் பயணம் வெற்று வாழ்க்கைப் பயணம்..!
  • கடவுள் இருக்கிறாரா என்று கேட்கும் உங்களுக்கு ஒரு பதில்.. நீங்கள் அலைந்து திரிந்து வீட்டுக்குச் சென்ற உடன் சாப்பிட்டாயா..சாப்பிடுகிறாயா..என்று கேட்பார்களே அவர்களே கடவுள்..!
  • நாம் அழும் போது மற்றவர்கள் அமைதியாக நின்றால் அது நம் பிறந்தநாள்..நாம் அமைதியாக கிடக்கும் போது மற்றவர்கள் அழுதால் அது நம் இறந்தநாள்..! பிறப்புக்கும் இறப்புக்குமான இடைவெளி இதுதான்..!
  • அழுகின்ற வினாடிகளும் சிரிக்கின்ற நிமிடங்களும் வாழ்க்கை சக்கரத்தில் நிரந்தரமில்லை. உருள்வதால் உருமாறிக்கொண்டிருக்கும் வாழ்க்கை..!
  • தொலைத்தவனுக்கு மட்டுமே தேடுதலின் அருமை தெரியும்..! பசிக்கிறவனுக்கு மட்டுமே உணவின் ருசி தெரியும்..! இழந்தவனுக்கே பிரிவின் அருமை தெரியும்..! எதிர் பார்ப்பவனுக்கே அன்பின் அருமை தெரியும்..! ஒவ்வொரு நிகழ்வாய் வாழ்க்கையின் நகர்வுகள்..!
  • ஏக்கர் ஏக்கராக இடம் வாங்குபவனை பார்த்து சிரித்தது சுடுகாடு..! உன்னைய வாங்கப் போவது நான் தான் என்று..!
  • இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்களிடம் உங்கள் பெருமையை காட்டாதீர்கள். அவர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு உதவுங்கள்.
  • யாரையும் கஷ்டப்படுத்தி கிடைக்கிற சந்தோஷமும் வேண்டாம்..! நாம சந்தோஷமா இருக்க வேறு யாரையும், கஷ்டப்படுத்தவும் வேண்டாம், நீ.. நீயாக இரு..! அதுவே உன் அடையாளம்..!
  • வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடைப்பட்ட காலத்தை கடந்து செல்ல அன்பானவர்களும் பண்பானவர்களும், சில துரோகிகளும், பல எதிரிகளும் தேவைப்படுகிறார்கள்..! அதுதான் வாழ்க்கைப்பாடம்..!
  • அன்பை அள்ளிக் கொடுத்தால் விரைவில் திகட்டி விடும்..! ஆயுள்வரை தித்திக்கும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளிக் கொடு..! அவ்வப்போது அன்பானவர்களுக்கு ஆச்சர்யம் கொடு..!
  • உடைந்த பொருளை ஒட்ட வைத்து அலங்காரம் செய்யலாம்..! ஆனாலும் பழைய அழகு கிடைப்பதில்லை...!மனதைக் காயப்படுத்திவிட்டு பின் ஆறுதல் சொல்லி எந்தப் பயனும் இல்லை..!
  • எத்தனை பெரிய துன்பமாகினும் உன்னை காக்கும் ஒரே ஆயுதம் உண்மையும் பொறுமையும் மட்டுமே..!
  • புகழ்ச்சியையும் இகழ்ச்சியையும் சரிசமமாக ஏற்றுக் கொள்ளுங்கள்..! எது? எப்போது? எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது..!
  • கடைசியில் உன்னிடம் மிஞ்சுவது உன் மீதான உன் நம்பிக்கை மட்டுமே..! அதை மட்டும் என்றுமே இழந்து விடாதே..! அது உன்னை எந்த சூழ்நிலையிலும் மீட்டெடுக்கும்...!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
காங்கேயத்தில் காளை சிலை அமைப்புக்கு ஆலோசனை கூட்டம்