சப்பாத்திக்கு சூப்பரா பனீர் பட்டர் மசாலா செய்து அசத்துங்க..
Paneer Butter Masala Recipe Tamil-பனீர் பட்டர் மசாலா மிகவும் சுவையான உணவு வகை இது பஞ்சாபிலில் அறிமுகமானது. ஆனால் இந்தியா முழுவதும் மிகப் பிரபலமாக உள்ளது. பனீர் பட்டர் மசாலா வட இந்தியா முழுவதும் பிரபலமடைந்து இருந்தாலும், தென்னிந்தியாவிலும் உணவு பிரியர்கள் மத்தியில் இவற்றுக்கு தனி வரவேற்பு உண்டு.
குறிப்பாக பனீர் பிரியர்கள் மத்தியில் பன்னீர் பட்டர் மசாலா நான் காம்பினேஷன் டாப் சாய்ஸ் ஆக உள்ளது. இவை பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. இவை செய்வதற்கும் எளிமையாக இருப்பதினால், இதை பெரும்பாலானோர் வீட்டிலேயே செய்கின்றனர் பனீரை வைத்து செய்யப்படும் உணவு வகைகளில் பனீர் பட்டர் மசாலாவிற்கே முதலிடம்.
பனீர் பட்டர் மசாலா நம்மில் பலர் அதிகம் விரும்பி உண்ணும் பொருளாக மாறி உள்ளது. இவற்றில் அசைவத்தை காட்டிலும் புரதசத்து அதிகம். சப்பாத்திக்கு குருமா என செய்து போரடித்தவர்கள் நிச்சயம் முயற்சி செய்யலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பொதுவாக பனீர் பட்டர் மசாலா வெண்ணை, முந்திரிப்பருப்பு, தக்காளி போன்றவற்றை கொண்டு செய்யப்படுகிறது. பனீர் பட்டர் மசாலா, பனீர் மக்னி என்றும் அழைக்கப்படுகிறது.
பனீர் பட்டர் மசாலாவில் பனீர் தவிர நீங்கள் வேக வைத்த சிக்கன் சேர்த்துக் கொள்ளலாம். அது பட்டர் சிக்கன் என்று அழைக்கப்படுகிறது. மேலும் பனீர் பட்டர் மசாலாவில் பனீருடன் சேர்த்து பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்குகளை பொரித்து சேர்த்துக்கொள்ளலாம். இதன் வாசனையும், சுவையும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சுவையான பனீர் பட்டர் மசாலா செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்
- பனீர் பட்டர் மசாலா செய்யும்பொழுது முந்திரி பருப்புகளை சேர்ப்பதன் மூலமாக மசாலா மிகவும் சுவையாகவும் இருக்கும்.
- உங்களுக்கு பிரஷ் கிரீம் கிடைக்கவில்லை என்று அதே அளவு திக்கான பால் சேர்த்துக் கொள்ளலாம்.
- கஸ்தூரி மேத்தி எனப்படும் உலர்ந்த வெந்தய கீரைப் பொடி மறக்காமல் சேர்த்துக்கொள்ளவும். இது பனீர் பட்டர் மசாலாவின் வாசனையைக் கொடுக்கும்.
- வீட்டில் செய்த பனீர் கடையில் வாங்கிய பனீரை காட்டிலும் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
250 கிராம் பனீர்
1 பெரிய வெங்காயம்
2 தக்காளி
சிறிய துண்டு பட்டை
3 லவங்கம்
3 ஏலக்காய்
2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு
இஞ்சி துண்டு சிறிதளவு
6 பூண்டு பற்கள்
4 தேக்கரண்டி வெண்ணெய்
2 தேக்கரண்டி மிளகாய் தூள்
1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
1/2 தேக்கரண்டி சர்க்கரை
1/4 தேக்கரண்டி காய்ந்த வெந்தய கீரை பொடி (கஸ்தூரி மேத்தி)
1/4 கப் பிரஷ் க்ரீம்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு கடாயில் 1 நறுக்கிய பெரிய வெங்காயம், 2 தக்காளிகள் நறுக்கியது ஆகியவற்றை சேர்க்கவும்.
- அதனுடன் 1 இன்ச் பட்டை, 3 ஏலக்காய், 3 லவங்கம் சேர்க்கவும்.
- மேலும் 2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு, 1 சிறிய துண்டு இஞ்சி, 6 பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்க்கவும்.
- மேலும் 500 மி.லி தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
- தக்காளி மென்மையாகும் வரை வெந்த பிறகு ஆறவைக்கவும்.
- ஆறிய பின்னர் கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் 4 தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.
- வெண்ணெய் உருகியதும் 2 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- குறைந்த தீயில் 2-3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- இப்பொழுது அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்து கலக்கவும்.
- அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து, 1/2 தேக்கரண்டி சீரகத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
- பின்னர் கடாயை மூடி வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- பிறகு 1/2 தேக்கரண்டி சர்க்கரை, 1/4 தேக்கரண்டி வெந்தயக்கீரை பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 1/4 தேக்கரண்டி பிரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்.
- இவை ஒன்றாக கலந்ததும் 250 கிராம் பன்னீர் துண்டுகளை சேர்த்து குறைவான தீயில் 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- கடைசியாக சிறிதளவு பொடியாக நறுக்கியகொத்தமல்லி சேர்த்து கலக்கவும்.
சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
பிறகென்ன! எப்பவும் செய்வதை விட கொஞ்சம் கூடுதல் சப்பாத்தி செய்யுங்க.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu