சுவையான விள மீன் பத்தி கேள்விப்பட்டுள்ளீர்களா?

Emperor Fish Benefits
X

Emperor Fish Benefits

Emperor Fish Benefits-வெல மீன் என்று பரவலாய் உச்சரிக்கப்படும் இந்த மீன் வகை தமிழகத்தில் அனேக இடங்களில் ரெகுலராகவே கிடைக்கும்.

Emperor Fish Benefits-விள மீன்கள் பொதுவாக வெல மீன் என்று பரவலாய் உச்சரிக்கப்படும். இந்த மீன் வகை தமிழகத்தில் அனேக இடங்களில் ரெகுலராகவே கிடைக்கும். ஜிலேப்பி (திலேப்பியா) மீனைப் போன்ற அமைப்பில் இருக்கும் இந்த மீன்கள் மிகச் சிறிய அதாவது கிலோவிற்கு இருபது மீன்கள் இருக்கும்

விளை மீன்களில் பல ரகங்கள் உண்டு. சற்றே சாம்பல் நிறம் கலந்த வெள்ளை நிற விளை மீன்களும், இளஞ்சிவப்பு விளை மீன்களும் இங்கே அதிகமாய் கிடைக்கும் வகைகள். இவற்றில் இளஞ்சிவப்பு விளை மீன்கள் சற்றே கூடுதல் சுவையோடு இருக்கும்.

சிவப்பு விளை மீன்களில்கூட சிறு சிறு வேறுபாடுகளுடன் நிறைய வெரைட்டிகள் உண்டு. தோள் தடிமனாய் ஒரு வகை உண்டு. அவை விளை மீன்களின் அடையாளத்தில் இருப்பினும் துடுப்புகள், வடிவம் இவற்றில் வித்தியாசப்படும்.

விளை மீன்கள் சற்றே பழைய மீனாய் இருந்தாலும் சுவையில் பெரிய வித்தியாசம் இருக்கும். புது மீன்,பழைய மீன் என பார்த்த உடன் அடையாளம் காணுவது விளை மீன்களில் கடினம். செவுள் சிவப்பு நிறத்தில் தெரிந்தால் மட்டும் வாங்கவும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!