கழுத்து வீங்கி உயிரிழக்கும் ஆடுகள் - அந்தியூர் பகுதியில் பரபரப்பு!

கழுத்து வீங்கி உயிரிழக்கும் ஆடுகள் - அந்தியூர் பகுதியில் பரபரப்பு!
X
அந்தியூரில் மர்ம நோயால் ஆடுகள் இறப்பதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அந்தியூர்: அந்தியூர் அருகே நகலுார், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரசுதன், 46; குடும்பத்தினருடன் குடியிருந்து கொண்டு, விவசாயம் செய்வதுடன், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி

கால்நடை பராமரிப்பு துறை சார்பில், ஒரு வாரமாக பர்கூர் மலைப்பகுதியை ஒட்டிய பகுதியில், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளுக்கு, நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆடுகள் திடீர் உயிரிழப்பு

இந்நிலையில் ஹரிஹரசுதனுக்கு சொந்தமான இரு ஆடுகள், கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு நேற்று திடீரென இறந்தன. மேலும் மூன்று ஆடுகள் உடல் சோர்வுடன் காணப்பட்டன.

கால்நடைத்துறையினர் விசாரணை

அவர் தகவலின்படி சென்ற கால்நடைதுறையினர், உயிரிழந்த ஆடுகளின் குடல், இரைப்பையை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

ஆடு வளர்ப்போர் பீதி நிலை

மூன்று தினங்களுக்கு முன் இதே பகுதியில் அழகேசன் என்பவருக்கு சொந்தமான, மூன்று ஆடுகள் கழுத்துப் பகுதியில் வீங்கி இறந்துள்ளன. இதனால் ஆடு வளர்ப்போர் பீதி அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கை

கால்நடைத்துறையினர் நோயை கண்டுபிடித்து, அதற்கான சிகிச்சை அளித்தால் மட்டுமே, மற்ற ஆடுகளை காப்பற்ற முடியும் என்று, இப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai marketing tools