பிக்பாஸ்சீரியல் நடிகை ஆயிஷாவுக்கு எத்தனை கல்யாணம்னு தெரியுமா?

bigg boss 6 ayesha got married two times, bigg boss ayesha
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருப்பவர் ஆயிஷா. சீரியல் நடிகையான இவர் இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த வாரம் கூட கமல் தன்னை தவறாக சித்தரிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க் நடந்தபோது ஏராளமானோர் தங்களது கதையை சொன்னார்கள். ஆனால் ஆயிஷா தனது கதையை சொல்ல விரும்பவில்லை எனக் கூறினார். அப்படி சொல்ல முடியாத அளவுக்கு அவரது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு இருந்து வந்தனர்.
bigg boss 6 ayesha got married two times, bigg boss ayesha

பாரம்பரிய மேக்அப்பில் சின்னத்திரை சீரியல்நடிகை ஆயிஷா (பைல்படம்)
இந்நிலையில், ஆயிஷாவின் முன்னாள் காதலன் தேவ் என்பவர் அவரைப் பற்றிய பல ஷாக்கிங் தகவல்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : "ஆயிஷாவுக்கு 16, 17 வயது இருக்கும்போதே அவரது வீட்டில் அவருக்கு திருமணம் செய்துவைத்துவிட்டனர். இதையடுத்து 18 வயதில் அவங்களுக்கு இரண்டாவது திருமணம் நடந்தது. அதன்பின்னர் தான் கேரளாவில் இருந்து சென்னைக்கு படிக்க வந்தார் ஆயிஷா.
அப்போது தான் ஆயிஷாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலிக்க ஆரம்பித்தோம். கல்யாணம் பற்றி பேச அவரது குடும்பத்தினரை சந்திக்க கேரளாவுக்கு சென்றேன். அங்கு எங்களது காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு என்னை அடித்து டார்ச்சர் செய்தனர். இந்த எதிர்ப்பை மீறியும் காதலித்து வந்தேன்.
bigg boss 6 ayesha got married two times, bigg boss ayesha

பிக்பாஸ்6வது சீசனில் உள்ளே நடக்கும் விவாதத்தில் பங்குகொண்டு பேசும் ஆயிஷா (பைல்படம்)
bigg boss 6 ayesha got married two times, bigg boss ayesha
ஆயிஷாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வாங்கி தந்ததும் நான் தான். எங்களது காதல் முறிந்ததற்கு காரணம் அவளுடன் சத்யா சீரியலில் நடித்த விஷ்ணு தான். தற்போது அவர் ஒரு இந்து பையனுடன் தொடர்பில் இருக்கிறார். அவர் பெயர் யோகேஷ். இதனால் தான் தன் கழுத்தில் y என்ற எழுத்துடன் செயின் போட்டிருப்பார் ஆயிஷா.
ஆயிஷாவின் மனது ஒரு நிலையில் இருக்காது. அதேபோல் தான் அடிக்கடி காதலர்களையும் மாற்றிக்கொண்டே இருப்பார். என்னைவிட்டு பிரிந்த அடுத்த நாளே விஷ்ணு உடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரே கேரவனில் இருப்பார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
bigg boss 6 ayesha got married two times, bigg boss ayesha

bigg boss 6 ayesha got married two times, bigg boss ayesha
ஆயிஷா யாரையெல்லாம் லவ் பண்ணுகிறாரோ அவர்களையெல்லாம் தனது கணவர் என்று சொல்லிக்கொள்வார். யாரோடெல்லாம் நெருங்கி பழகுகிறார்களோ அவர்களிடம் எல்லாம் தாலி ஒன்றை வாங்கித் தரச் சொல்லி போட்டுக்கொள்வார். என்னுடன் இருக்கும் போது நானும் அவங்களுக்கு தாலி வாங்கி கொடுத்தேன். அப்போது D என்கிற டாலருடன் அந்த தாலியை போட்டுக்கொண்டார். இப்போது யோகேஷ் உடன் பழகி வருவதால் Y என்கிற டாலருடன் கூடிய தாலியை அணிந்திருக்கிறார்.
bigg boss 6 ayesha got married two times, bigg boss ayesha

bigg boss 6 ayesha got married two times, bigg boss ayesha சோக காட்சியில் ஆயிஷா (பைல்படம்)
ஆயிஷாவுக்கு அசீமை பல வருடங்களாக தெரியும். ஆயிஷா சீரியலில் நடிக்கும் முன்பே அசீமும் அவரும் நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். அவர் சண்டை போடுவதை ஒரு யுக்தியாக தான் பயன்படுத்தி தான் வருகிறார்கள். பிக்பாஸ் ஸ்மோக்கிங் ரூமில் இருவருமே சேர்ந்து திட்டமெல்லாம் போடுகிறார்கள் அதெல்லாம் நமக்கு காட்டப்படவில்லை. அதேபோல் ஆயிஷா உடல்நிலை சரியில்லாதது போல் காட்டுவதும் ஒரு நடிப்பு தான். அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை" என ஆயிஷாவைப் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார் அவரது முன்னாள் காதலன் தேவ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu