Appa ponnu quotes-ஆழ்கடலில் தந்தை மூழ்கியெடுத்த முத்து, மகள்..!
Appa ponnu quotes-அப்பா -மகள் உறவு (கோப்பு படம்)
Appa ponnu quotes
அப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தொடமுடியாத விண்மீன். தன மனைவி மீதான முன்பைவிட பலமடங்கு தனது மகள் மேல் வந்துவிடும். இது ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.
Appa ponnu quotes
முதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய். இதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்து மகள் தான். அவனது இறப்பு வரை மனைவி உடன் இருக்கிறாள். ஆனாலும் ஒரு ஆண் தனது மகளை விரும்பக் காரணங்கள் இருக்கின்றன. அது என்ன என்று பார்க்கலாம் வாங்க.
தோழன்:
தங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே உறவு தந்தை தான் என உறுதியாக நம்புகின்றனர்.
Appa ponnu quotes
அறிமுகம் :
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தைக் காட்டியது இல்லை.
மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை. வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், “முடியாது..” என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.
Appa ponnu quotes
காவலன் :
வெளியிடங்களுக்குச் சென்று தாமதம் ஆனால், அது எந்நேரமாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.
நண்பன் :
காதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.
Appa ponnu quotes
நாயகன்
தங்களுக்கு என்ன மோசமான சூழ்நிலை வந்தாலும், ஏற்பட்டாலும் அதிலிருந்து மீட்டு வரும் சூப்பர் ஹீரோ அப்பா தான். தைரியம் ஊட்டும் அம்மா என்னதான் பாலூட்டினாலும், பெண்களுக்குள் தைரியத்தை ஊட்டுவது அப்பாக்கள் தான். அம்மாவுக்கு எப்போதுமே தங்களது குழந்தைகள் மீது ஓர் பயம் இருக்கும். அது பயம் அல்ல, அக்கறை.
ஆதலால், தைரியத்தை ஊட்ட அப்பாக்களால் மட்டும் தான் முடியும். மாற்றம் இல்லாதவர் ஓர் பெண்ணின் உறவில், அனைவரும் ஒவ்வொரு சூழ்நிலை வரும் போதும், மாறி, மாறி, தோன்றுவர். அவர்களுக்குள் நிறைய மாற்றங்களை காணமுடியும். ஆனால், அம்மா, அப்பா மட்டும் தான் கடைசி வரை எந்த மாற்றமும் இல்லாமல், மகளை ஏமாற்றம் அடைய வைக்காமல் இருக்கும் உறவுகள்.
ஓகே இப்போ அப்பா மகள் மேற்கோள்களை பார்க்கலாமா?
நான் என் இளவரசரைக் கண்டுபிடிக்கலாம், ஆனால் என் அப்பா எப்போதும் என் ராஜாவாக இருப்பார்
மகள் பிறந்ததும் புதிதாய் நடைப்பழக கற்றுக்கொள்கிறான் ஒவ்வொரு தந்தையும் அவளின் கைகளை பிடித்து
மகள் உலகின் மிக அழகானவள், அதனால்தான் மகள் தந்தைக்கு அன்பாக இருக்கிறாள்
அப்பா கைக்குள் மகள் இல்லை. மகள் கைக்குள் தான் அப்பா. தொட்டிலில் தொடங்கும்
இந்த பாசத்துக்கு வாழ்நாள் முழுவதும் மவுசு அதிகம்தான்
Appa ponnu quotes
ஒரு பெண்ணின் தந்தையை விட சிறந்த நண்பர் யாரும் இல்லை.
ஒரு தந்தை ஒரு மகனின் முதல் ஹீரோ மற்றும் ஒரு மகளின் முதல் காதல்
பெண்கள் தந்தையை அதிகம் நேசிக்கக் காரணம் எவ்வளவு அன்பு வைத்தாலும் தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்,அவளின் தந்தை என்பதால்
சிறிய மகள்கள் மட்டுமே வலிமையான ஆண்களின் இதயங்களை மென்மையாக்க முடியும்
Appa ponnu quotes
தந்தைகள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க ஒரு வழியைக் கொண்டுள்ளனர்
இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று இதுவரை எண்ணியதில்லை.ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால்
நான் மீண்டும் கேட்பது,உனக்கு மக்களாகவே பிறக்க வேண்டும் என்று
எனக்கு கல்யாண பயம் இல்லை, அப்பாவை விட்டுப் போக பயம்.
என் அப்பா அற்புதமானவர். ஆனால் அவர்கள் சொல்வது உங்களுக்குத் தெரியும், ‘அப்பாவைப் போல மகளைப் போல
Appa ponnu quotes
கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு. கடவுளே கிடைத்தார் வரமாக,அவர்தான் என் அப்பா
ஒரு அப்பாவின் பெண்ணாக இருப்பது உங்கள் வாழ்நாள் முழுவதும் நிரந்தர கவசம் வைத்திருப்பது போன்றது
மகளை ராணியாக்க அவள் தந்தையைத் தவிர யாராலும் முடியாது
தான் பெற்ற மகளை மட்டுமல்ல மகளின் பெயரையும் சேர்த்து பாதுகாக்க தங்களின் பெயரை பின்னால் துணை அனுப்புகிறார்.
Appa ponnu quotes
ஒவ்வொரு பெரிய மகளுக்குப் பின்னாலும் ஒரு அற்புதமான அப்பா இருக்கிறார்
பொண்ணு பொம்பளைகள் இல்ல சார், அப்பா அவர்களை பொம்பளை என்று அன்புடன் அழைப்பார்.
ஆயிரம் உறவுகள் நம் அருகில் இருந்து நமக்கு ஆறுதல் சொல்லி அணைத்தாலும் அப்பாவின் அரவணைப்பில் ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்
வயது முதிர்ந்த தந்தைக்கு மகளை விட வேறு எதுவும் பிரியமில்லை
Appa ponnu quotes
என்னிடம் சொல்லாமலேயே அவருக்கு எல்லாம் தெரியும், நான் சொல்வதையெல்லாம் என் அப்பா ஏற்றுக்கொள்கிறார்
தன் மகளை தாயின் மறுபிறவியாகவும் தன் வீட்டு தெய்வமாகவும் நினைக்கும் அப்பாக்கள் இங்கு அதிகம்
மகளின் தந்தை உயிருடன் இருக்கும் வரை வாழ்க்கை சொர்க்கத்திற்கு குறையாது
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உறவு உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் முக்கியமான உறவு.
Appa ponnu quotes
பெண்களுக்கு வாழ்வில் ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும் அவளின் வாழ்நாள் முழுதும் தன் அப்பாவின் உறவைப்போன்று ஒரு உறவைப் பெறவே முடியாது
ஒரு மகள் தாய்க்கு ராணி போன்றவள். ஆனால், தந்தைக்கு மகள் தேவதை போன்றவள்
என்னைத் தோளில் ஏற்ற தலை குனிந்த உன்னை என்றும் தலைகுனிய விடமாட்டேன் அப்பா
Appa ponnu quotes
ஒரு பெண் தன் தந்தையின் தேவதை மட்டுமல்ல, தந்தையின் பெருமையும் கூட.
சொந்தம் என்ற பாடம் கற்பிக்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு தந்தை, எனவே அவர் அன்பைப் பற்றி மட்டுமே பேசுகிறார்.
அவளில்லா நிறைவும் இல்லை. மகளில்லா மகிழ்வும் இல்லை. அவள் என்னை விட்டு பிரிந்து அங்கே மருமகளாய் செல்கையிலே, மனம் ஏற்கா ஓர் விடையிங்கே பிரியா விடை
Appa ponnu quotes
உலகில் உள்ள அனைத்து மகிழ்ச்சியும் என்னிடம் உள்ளது என் அப்பா என்னுடன் இருக்கும் போது
மகளின் எல்லா பிரச்சனைக்கும் உடனே தீர்வுகாணத் துடிக்கும் முதல் இதயம் அப்பா மட்டுமே
என் தந்தை குடும்பத்தின் பெருமை
என் தந்தை மகிழ்ச்சியின் இரண்டாவது அடையாளம்
Appa ponnu quotes
தேவதையாய்,ராட்சசியாய், தாயாய், தங்கையாய், தமக்கையாய், தோழியாய் இருந்திடுவாள் பலவகை உறவுகளாய். அவள் அவளாய் ஆனந்தமாய் இருந்திடுவாள் தந்தைக்கு மகளெனும் போதிலே
மகளின் ஒவ்வொரு விருப்பத்தையும் நிறைவேற்றுபவன் தந்தை.
மகளின் புன்னகை தந்தையின் உயிர்.
தந்தையின் தாய்மையை மகள்களால் மட்டுமே உணர முடியும்
Appa ponnu quotes
ஒரு பெண்ணை அதிகம் நேசிக்கும் ஒரே ஆண் அவளுடைய தந்தை மட்டுமே
ஆயிரம் கவலைகள் உள்ள தந்தையின் மிகப்பெரிய மகிழ்ச்சி தன் மகளின் ஒரே ஒரு சிரிப்பில் மறைந்துள்ளது
ஒரு ஆணுக்குப் பின்னால் பெண் இருப்பதை விட, பெண்ணுக்கு பின்னால் எப்போதும் அப்பா என்னும் ஆண் இருப்பதை விரும்புவது பெண் பிள்ளைகள் மட்டுமே.
Appa ponnu quotes
ஓராயிரம் கதை சொல்லி அன்னை உறங்க வைத்த போதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா, அப்பா..?
மகளை பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும் தன்னை பெற்ற அன்னையின் மறுபிறவி மகள் என்று.
ஆணிடம் அடம் பிடித்தால் சாதித்துவிடலாம் என்பதை பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பதே அவர்களின் அப்பாதான்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu