west bengal panchayat election 2023-மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை : 36 பேர் கொல்லப்பட்டனர்
West Bengal panchayat elction violence news in tamil-மேற்கு வங்கத்தின் பஞ்சாயத்து தேர்தல்களில் நேற்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். வாக்குப் பெட்டிகள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் பல கிராமங்களில் போட்டியாளர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.
பஞ்சாயத்து தேர்தல்கள் வாக்குப்பதிவு முடிந்த உடன் ஏற்பட்ட வன்முறை மாநிலத்தின் வரலாற்றில் மறக்கமுடியாத வடுவாக பதிந்து கிடக்கும் நிகழ்வாக மாறியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்தே 76 பேர் கொல்லப்பட்டனர் என்ற பெரிய அவப்பெயரை ஏற்படுத்தியது. தேர்தல் நாளில் மட்டும் ஏறக்குறைய 40 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த மாத தொடக்கத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து 30 பேர் இறந்திருந்த நிலையில், இந்த 2023ம் ஆண்டு பஞ்சாயத்து தேர்தல் வன்முறை வெடித்த இரத்தக்களரித் தேர்தல் ஆகிப்போனது. 2018ம் ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் நடந்த வன்முறைக்கு நிகரான வன்முறை இந்த தேர்தலிலும் நடந்துள்ளது அவமானத்தின் சான்றுகள் ஆகும்.
மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 73,887 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு 5.67 கோடி வாக்காளர்கள், சுமார் 2.06 லட்சம் வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கிறது. மாலை 5 மணி வரை 66.28 சதவீத வாக்குகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில தேர்தல் ஆணையர் (எஸ்இசி) ராஜிவ சின்ஹா சனிக்கிழமை வாக்குப்பதிவு புகார்களை பரிசீலிப்பதாகவும், பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகளைப் பெற்ற பிறகு மறு வாக்குப்பதிவு குறித்து முடிவெடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அன்றைய வாக்குப்பதிவின் போது வன்முறை சம்பவங்கள் குறித்த புகார்கள் நான்கு மாவட்டங்களில் இருந்து வந்ததாகவும், அவை அனைத்தும் தேர்தல் செயல்முறையை மதிப்பாய்வு செய்யும் போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சின்ஹா கூறினார்.
பல்வேறு அரசியல் கட்சிகளிடமிருந்து பல குறைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்த எஸ்இசி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்குப்பதிவு செயல்முறையை ஆய்வு செய்து, மறுஆய்வு செய்யும் போது மறு வாக்குப்பதிவு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
தேர்தல் முடிவுகள்
மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் வரும் 11ம் தேதி புதன் கிழமை அன்று நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணி முடிய முடிய முடிவுகள் வெளியிடப்படும்.
கீழே உள்ள இணைப்பை 'க்ளிக்' செய்து வீடீயோவைப் பார்க்கலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu