ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே புதிய அறிவிப்பு

ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே புதிய அறிவிப்பு
ஏ.சி. பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் பொது போக்குவரத்து பயணிகள் அதிகம் நாடுவது ரயில்களைத்தான். சொந்த ஊருக்கு செல்வது என்றாலும் சரிநகரம் விட்டு நகரமோ,மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டும் என்றாலும் முதலில் ரயில்களில் டிக்கெட் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு அதில் கன்பார்ம் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் பேருந்துகளிலும், கார்களிலும் செல்வதை பற்றி நடுத்தர வசதி கொண்ட மக்கள் யோசிக்கிறார்கள்.

பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணம் என்பதால் ஏழை எளிய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினரும் செல்லக் கூடிய ஒன்றாக ரயில்கள் தான் உள்ளன. ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ரயில்வேயும் பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. புதிய ரயில்கள் அறிமுகம் செய்வது. ரயில்களின் வேகத்தை அதிகரிப்பது உள்பட பல்வேறு மேம்படுத்தபட்ட வசதிகளின் ரயில்வே தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

ரயில் பயணங்களிலும் ஏசி பெட்டியில் பயணிப்பதை பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். ரயிலின் ஏ.சி. பெட்டியில் படுக்கை உறுதி செய்யாத பயணிகளுக்கு ஆர்.ஏசி எனப்படும் அமர்ந்து கொண்டே செல்லும் இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. தற்போது ஏசி பெட்டியில் ஆர்.ஏ.சி இருக்கையில் பயணம் செய்யும் பயணிகளுக்கு ஒரு புதிய அறிவிப்பை ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதேபோல், வந்தே பாரத் உள்ளிட்ட நவீன சொகுசு வசதிகள் கொண்ட ரயில்களும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுக்க முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 30 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இனி தொலைதூரங்களுக்கு செல்லும் வகையில்,படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களையும் அறிமுகம் செய்ய ரயில்வே தயாராகி வருகிறது. ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ரயில்களில் தற்போது ஏசி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிகளின் வசதிக்காக கம்பளி போர்வைகள் வழங்கப்பட்டு வருகிறது. படுக்கை விரிப்புடன் இந்த கம்பளி போர்வை வழங்கப்பட்டு வருகிறது.

ஏ.சி. பெட்டிகளில் குளிரை தாங்கும் வகையில் கம்பளி போர்வைகள் வழங்கப்பட்டு வந்தாலும் ஆர்.ஏ.சி. எனப்படும் அமர்ந்து கொண்டு செல்லும் இருக்கை ஒதுக்கப்படும் பயணிகளுக்கு போர்வை இதுவரை வழங்கப்படுவது இல்லை. இதனால் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் கம்பளி போர்வை ஒதுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இனி ஆர்.ஏ.சி இருக்கையில் செல்லும் பயணிகளுக்கும் கம்பளி போர்வை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பு பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Tags

Next Story