இமாச்சல பிரதேசத்தில் பலத்தமழையால் அடித்து செல்லப்பட்ட பாலங்கள்

இமாச்சல பிரதேசத்தில் பலத்தமழையால் அடித்து செல்லப்பட்ட பாலங்கள்
X

வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் கார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் பெய்த பலத்தமழையால் அடித்து செல்லப்பட்ட பாலங்கள், மரங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன.

இமாச்சலப் பிரதேசத்தில் பெய்த பலத்த மழையால் மரங்கள், பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன.

Himachal pradesh flood news in tamilஇந்தியாவின் பாதுகாப்பு அரணாக விளங்குவது இமயமலை. இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயம் எனவும் இந்த மலைக்கு ஒரு பெயர் உண்டு. இத்தகைய சிறப்புக்குரிய இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது இமாச்சலப் பிரதேசம். இறைவன் சிவபெருமானின் திருவடி என்ற பெயரும் இம்மாநிலத்திற்கு உண்டு.


இந்தியாவின் சுற்றுலா நகரங்களில் இமாச்சலப் பிரதேசமும் ஒன்று. எழில் சூழ்ந்த மரங்கள், காடுகள், பனிதொடர் மலைகள் என இயற்கையால் சூழப்பட்ட மலையின் அடிவாரத்தில் இருப்பதால் இயற்கை சீற்றத்தால் இம்மாநிலம் அடிக்கடி பாதிக்கப்படுவது உண்டு. அந்த வகையில் இப்போது பெய்த பலத்த மழையினால் இமாச்சலப் பிரதேசம் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

Himachal pradesh flood news in tamilநேற்று இரவில் இருந்து இன்று மதியம் வரை கொட்டி தீர்த்த கனமழையால் இமாச்சலப் பிரதேசத்தை சுற்றி ஓடும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. மண்டி,துனாக் ஆகிய பகுதிகளில் மலை அடிவாரத்தில் இருந்த சாதாரண கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.


இடிந்து விழுந்த கட்டிடங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சாலைகள் வழியாக பாய்ந்து சென்றன. சாலைகள் எல்லாம் இதன் காரணமாக திறந்த வெளி மழை நீர் வடிகாலாக மாறின. வீடுகளில் இருந்த மக்கள் செய்வதறியாது தவித்தனர்.

பல இடங்களில் கட்டப்பட்ட ஆற்றுப்பாலங்கள் ஆட்சி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு விட்டன. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்களை மீட்கும் பணியில் போலீசாரும்,துணை ராணுவம் படையினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மக்கள் 24 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Himachal pradesh flood news in tamilஇமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த பேரழிவு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேச மக்களுக்கு உதவுவதற்கு தமிழகம் தயாராக இருக்கிறது என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags

Next Story