மூச்சு விடுதலில் சிக்கலை ஏற்படுத்தும் சுவாச நோய் அறிகுறிகள் என்னென்ன?

மூச்சு விடுதலில் சிக்கலை ஏற்படுத்தும் சுவாச நோய் அறிகுறிகள் என்னென்ன?

Symptoms of Difficulty Breathing- மூச்சு விடுதலில் சிக்கலை ஏற்படுத்தும் சுவாச நோய் பாதிப்புகள் குறித்து அறிவோம் ( கோப்பு படம்)

Symptoms of Difficulty Breathing- மூச்சு விடுதலில் சிக்கலை ஏற்படுத்தும் சுவாச நோய்கள், அதன் அறிகுறிகள், காரணங்கள் குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்வோம்.

Symptoms of Difficulty Breathing- மூச்சுக்குழாய் அழற்சி அதாவது சுவாச நோயானது இது நுரையீரலுக்கு காற்றை எடுத்து செல்லும் மூச்சுக்குழாயில் உண்டாகும் அழற்சி. இந்நிலையில் மூச்சுக்குழாய் வீங்கும். இதனால் சளி, இருமல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும். இந்த மூச்சுக்குழாய் அழற்சி குறித்து இப்போது தெரிந்துகொள்வோம்.

சுவாச நோய்களில் மூச்சுக்குழாய் அழற்சி என்பது முக்கியமானது. நுரையீரலுக்கு செல்லும் காற்றுப்பாதைகள் வீக்கமடைந்து சளியால் தேங்கியிருக்கும். அப்போது உடல் சளியை அகற்ற முயற்சிக்கும் போது இருமல் வரும். இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்கள் வரை இருக்கும். கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி வைரஸால் உண்டாகிறது. இது தானாகவே குணமாகும் என்றாலும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்தால் அதை கட்டுப்படுத்த செய்யலாம். இந்த மூச்சுக்குழாய் அழற்சி குறித்து சற்று விவரமாக பார்க்கலாம்.

​மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis )

மூச்சுக்குழாய் அழற்சி என்பது நுரையீரலுக்கு காற்று எடுத்துசெல்லும் மூச்சுக்குழாயின் குடூச்சி பகுதியில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியை குறிக்கும் நிலை. இது சுவாச நோய் அல்லது நுரையீரல் நோய் என்றும் அழைக்கலாம்.

நுரையீரலிலிருந்து காற்று உள்ளேயும் வெளியேயும் எடுத்து செல்லும் வேலையை இந்த மூச்சுக்குழாய் தான் செய்கின்றன. இந்த பாதைகள் சளி தேக்கத்தால் சுருங்கும் போது சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த அழற்சியினால் இருமல் அடர்த்தியான சளியை உண்டு செய்யும். இந்த அழற்சி கடுமையானது நீண்ட காலம் வரை இருக்கலாம்.


மூச்சுக்குழாய் அழற்சி வகைகள்

​இது கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி என்று இரண்டு வகைப்படுகிறது.

கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி- இது வைரஸ் தொற்று காரணமாக உண்டாகிறது. சில வாரங்களில் தானாகவே இது குணமடையக்கூடும். பெரும்பாலும் இதற்கு சிகிச்சை தேவைப்படாது.

நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி - இது வருடத்தில் மூன்று மாதங்களுக்கு பெரும்பாலான நாட்களில் சளியுடன் இருமல் இருந்தால் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி என்று சொல்லப்படுகிறது. இது குறைந்தது இரண்டு வருடங்கள் வரை கூட இருக்கும். நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்தால் அது நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் chronic obstructive pulmonary disease (COPD). என்றழைக்கப்படும். இந்நிலையில் மருத்துவர் சிஓபிடி பரிசோதனைக்கு அறிவுறுத்தலாம். ​

​மூச்சுக்குழாய் அழற்சி ஆபத்து யாருக்கு வரும்?

இந்த மூச்சுக்குழாய் அழற்சி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

புகைப்பழக்கம் கொண்டிருப்பவர்கள் அல்லது புகைப்பிடிப்பவர்களின் அருகிலேயே இருப்பவர்கள்

ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் கொண்டிருப்பவர்கள்

அசிடிட்டி பிரச்சனை கொண்டிருப்பவர்கள்

ஆட்டோ இம்யூன் கோளாறுகள் அல்லதுவேறு நோய்கள் பாதிப்பில் இருப்பவர்கள்

காற்று மாசுபாடு அதிகம் இருக்கும் இடங்களில் வசிப்பவர்கள்

புகை அல்லது இராசயனங்கள் இருக்கும் பகுதியில் வாழ்பவர்கள் இந்த ஆபத்துக்கு அதிகமாக இருக்கலாம்.

​மூச்சுக்குழாய் அழற்சி அறிகுறிகள்

மூச்சுக்குழாய் அழற்சி அறிகுறிகளில் முக்கியமானது இருமல். இது முதல் மூன்று வாரங்கள் வரை நீடித்து இருக்கும். மூச்சுக்குழாய் அழற்சியுடன் இருமும் போது சளி வெளியேறாமல் உலர்ந்த இருமல் வரும். அதே போன்று சுவாசிக்கும் போது விசில் சத்தம் கேட்கலாம். இதனோடு இன்னும் சில அறிகுறிகளும் சொல்லப்படுகிறது.

மூச்சுத்திணறல் அல்லது மூச்சு விடுதலில் சிரமம்

காய்ச்சல்

மூக்கு ஒழுகுதல்

அதிக சோர்வு

மூச்சுக்குழாய் அழற்சிக்கு காரணமான வைரஸ்கள்

மூச்சுக்குழாயில் வைரஸ் தொற்று உண்டாகும் போது அழற்சியை உண்டு செய்யலாம். அதே நேரம் காற்றுப்பாதைகளை எரிச்சலூட்டும் கிட்டத்தட்ட எதுவும் இந்த அழற்சியை உண்டு செய்யலாம். மூச்சுகுழாய் அழற்சியின் தொற்று அல்லாத இன்னும் சில காரணங்களும் உண்டு.


வைரஸ்கள்

மூச்சுக்குழாய் அழற்சியை ஏற்படுத்தும் வைரஸ்களில் இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்), சுவாச ஒத்திசைவு வைரஸ் ( respiratory syncytial virus (RSV) அடினோ வைரஸ், ரைனோ வைரஸ் (ஜலதோஷம்) கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் காரணமாக இருக்கலாம்.

​மூச்சுக்குழாய் அழற்சிக்கு காரணமான பாக்டீரியாக்கள்

பாக்டீரியாவும் மூச்சுக்குழாய் அழற்சியை உண்டு செய்யலாம். பாக்டீரியாக்களில் போர்டெல்லா பெர்டுசிஸ், மைக்கோபிளாஸ்மா நிமோனியா கிளமிடியா நிமோனியா போன்றவை காற்று மாசுபாடு புகைப்பழக்கம்​ போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. எனவே, இதுகுறித்த முன்னெச்சரிக்கையோடு இருக்கிற பட்சத்தில் இந்த சுவாச நோய் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.

Tags

Next Story