Manathakkali Keerai பல நோய்களைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் மிகுந்த மணத்தக்காளிக்கீரை....
Manathakkali Keerai
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் உபயோகப்படுத்தும் காய்கறி, கீரை வகைகளில் தாதுச்சத்துகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு காய், கீரை வகைகளைப்பொறுத்து இதன் தன்மை வேறுபடுகிறது. அந்த வகையில் நாம் மணித்தக்காளி கீரையில் உள்ள மருத்துவ குணங்களைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
இதன் காயும் பழமும் மணி மணியாக இருப்பதால் இதற்கு மணித்தக்காளி எனப் பெயர் வந்தது. கீரை வகைகளில் மணித்தக்காளியும் ஒன்றாகும். மணித்தக்காளி சிறு செடி இனத்தைச் சேர்ந்ததாகும். இதன் இலைகள் பச்சை நிறமாக தக்காளி இலையைப் போன்று இருக்கும்.
பூக்கள் கொத்துக் கொத்தாக வெள்ளை நிறத்தில் இருக்கும். இதன் காய்கள் பச்சை நிறத்தில் மிளகு போன்று காணப்படும். பழுத்ததும் கறுப்பு நிறமாக மாறிவிடும். மணித்தக்காளி இலையைக் கீரைபோல் கடைந்து உணவில் சேர்த்து உண்டு வந்தால் சளித் தொந்தரவு இருப்பின் நீக்கி விடும். இருமல்,இரைப்பு குணமாக்கும்.
வாயிலும் , வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. மணித்தக்காளி இலை, காய் , பழம் வேர் இவைகளை வற்றலாகவும், ஊறுகாயாகவும் குடிநீராகவும் பயன்படுத்தினால் நோய்கள் அகற்றி உடலுக்கு வலிமையைத் தரும்.
விரை வீக்கத்திற்கு
விரை வீக்கத்தினால் அவதிப்படுவோர் மணித்தக்காளி இலையைக் கொண்டு வந்து வதக்கிஇளம் சூட்டுடன் அதில் வைத்து கட்டி வந்தால் விரைவீக்கம் குணமாகும்.
Manathakkali Keerai
மணித்தக்காளி வற்றல்
மணித்தக்காளியை வற்றல் செய்து உட்கொண்டால் சுவையின் மையை நீக்கி பசியைத்துாண்டும். அத்துடன் பலவித நோய்களும் குணமாகும்.
மணித்தக்காளி காய்களைப் பறித்து சுத்தம் செய்து மோருடன் சிறிது உப்பு சேர்த்து இக்காய்களைப் போட்டு எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக்கொள்ளவும். இந்த வற்றலை எண்ணெயில் வறுத்து பொடி செய்து இப்பொடியைக் கலந்து மூன்று உருண்டைகள் சாப்பிட்டு வரவும். இதனால் மலச்சிக்கல், வயிற்றில் பூச்சித்தொல்லை, உடல் மெலிந்து பலவீனமாக இருத்தல், காசம் போன்ற குறைபாடுகள் நீங்கும். நீரிழிவு நோய் மட்டுப்படும்.
நெஞ்சில் கோழை
நெஞ்சில் கோழை கட்டிக்கொண்டு தொந்தரவு கொடுத்தால் மணித்தக்காளிக் காய்களை சமைத்து உணவுடன் சேர்த்து உண்டால் கோழையை அகற்றி விடும்.
ரத்த மூலத்திற்கு
ரத்த மூலத்தினால் கஷ்டப்படுபவர்கள் மணித்தக்காளி இலையைக் கீழ்காணும் முறையில் பயன்படுத்தி நலம் பெறலாம். மணித்தக்காளி இலையையும், சிறு வெங்காயத்தினையும் சன்னமாக நறுக்கிக்கொள்ளவும்.
மட்பாண்டத்தை அடுப்பில் வைத்து சிறிது விளக்கெண்ணெய் ஊற்றி நறுக்கியுள்ளவற்றை இதில் கொட்டி லேசாக வதக்கிக் கொள்ளவும்.இதனை சூட்டோடு ஒரு பெரிய வெற்றிலையில் வைத்து நோயுள்ள இடத்தில் வைத்துக்கட்டவும். மூலநோயினாலும், ரத்தமூலத்தினால் கஷ்டப்படுகின்றவர்களும் இதமாக இருக்கும்.
அஜீரணக்கோளாறுக்கு
அஜீரணக்கோளாறுக்கு மணித்தக்காளி ரசம் நல்ல நிவாரணம் அளிக்கும்.மணித்தக்காளி இலையைச்சட்டியில் இட்டு அதிக அளவு நீர்விட்டுசுண்டக் காய்ச்சி நீரை வடித்து எடுத்துக்கொள்ளவும். இந்த வடித்த நீரில் மிளகு, சீரகம் உப்பு சேர்த்து எண்ணெயைத் தாளித்து ரசத்தைச் சோற்றில் தளர ஊற்றிச் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு அகன்று உடல் நலமாக இருக்கும்.
சகல நோய்களுக்கு தைலம்
மணித்தக்காளி தைலம் தயார் செய்து பல நோய்களுக்கும் பயன்படுத்தி பலன் பெறலாம். மணித்தக்காளி இலையை
தண்ணீர் ஏற்றினால் இடித்து அரைலிட்டர் சாறு எடுத்து அத்துடன் அரை லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து மட்பாண்டத்தில் ஊற்றி அத்துடன் சிறு வெங்காயத்தினைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்து 25 கிராம் எடுத்து அத்துடன் சேர்த்துக்கொள்ளவும்.
நாட்டு மருந்துக்கடையில் நேவல் சின்னி என்று கேட்டால் கொடுப்பார்கள். அதனை வாங்கி வந்து துாள் செய்து மட்பாண்டத்தில் போட்டு நன்கு கலக்கி அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். காய்ச்சும்போது நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கவும். எண்ணெய் சிறுகச் சிறுக சுண்டி தைலம் பதம் வந்ததும் கீழே இறக்கி வடிகட்டி பத்திரமாக பாட்டிலில் ஊற்றிவைத்துக்கொள்ளவும். தினசரி இரவு உணவுக்கு பிறகு இந்த தைலத்தில் இரண்டு ஸ்பூன் எடுத்து அரை டம்ளர் பசும்பாலில் கலந்து சர்க்கரை சிறிது போட்டு கலக்கிக் குடிக்கவும்.
Manathakkali Keerai
இதுபோன்று கடைப்பிடித்தால் உள் மூலம், வெளிமூலம், ரத்த மூலம் ஆகியவைகள் குணமாகும். அத்துடன் மலத்துவாரத்தில்புண் இருந்தாலும் மலத்துவாரத்தின் பக்கவாட்டில் சிறு சிறு கட்டிகள் இருந்தாலும் இந்தத் தைலத்தைத் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டாலே நல்ல பலன் அளிக்கும். இதே மணித்தக்காளி தைலத்தைச் சாப்பிட்டால் கீழ்க்கண்ட நோய்களும் குணமாகும். குடற்புண், வாய்ப்புண், மூளை உஷ்ணம், கண் எரிச்சல், கண்களில் கட்டி, குலை எரிச்சல், தீராத வயிற்றுவலி, மற்றும் உஷ்ண சம்பந்தமான நோய்களும் குணமாகும்.
பெண்களுக்கு உண்டாகும் பிரச்னை
மணித்தக்காளியின் இலையைப் பறித்து வந்து கஷாயம் செய்து அதனை அடிக்கடி ஆறவைத்து பெண்களின் மர்மப்பகுதியில் தடவி அதனை அடிக்கடி சுத்தம் செய்து வந்தால் வெட்டைச்சூட்டினால் உண்டான வெள்ளை குணமாகும்.
காமாலை நோய்க்கு
காமாலை நோய்க்கு இதனைஇடித்து பசும்பாலில் கலக்கி தினசரி காலையில் கொடுக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து கொடுப்பதினால் சிறுநீர், மலம், சுத்தமாக வெளியேறி ரத்தத்தைச் சுத்தம் செய்து பித்தத்தை வெளியேற்றி ஒன்பது நாட்களில் காமாலை நோய் குணமாகும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu