ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்த கொய்யா: எப்படி என தெரியுமா?

ஆப்பிள் பழத்தை  விட சக்தி வாய்ந்த கொய்யா: எப்படி என தெரியுமா?
ஆப்பிள் பழத்தை விட சக்தி வாய்ந்த கொய்யா பழத்தில் என்னென்ன சத்துக்கள் என்பதை அறிய தொடர்ந்து படிக்கலாம்.

ஆப்பிள் மத்திய ஆசிய ,ஐரோப்பிய கண்டத்தைச் சார்ந்தது. நாம் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள் தானே. அதனால் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்ளலாம். ஆப்பிள் நமது கண்டத்தின் பழம் என்று. நாடு என்று பார்த்தால் நமது இந்தியாவின் வட மாநிலங்களான காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம் , உத்தரகாண்ட் போன்ற இமய மலையின் அடிவாரப்பகுதிகளிலும் சீனா, உடைந்த சோவியத் யூனியன் நாடுகள் , ஐரோப்பா போன்றவற்றில் விளைந்தவை ஆப்பிள்கள். இங்கிருந்து அமெரிக்கக் கண்டத்திற்கு சென்ற பழம் நம்முடைய ஆப்பிள்.

ஆனால் கொய்யா - தென் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்தது, இன்னும் சொல்லப்போனால் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தது என்று தரவுகள் கூறுகின்றன. அங்கிருந்து இங்கு வந்த பழம்தான் அது. கொய்யா நமது நேட்டிவ் கனியன்று. நாம் எப்போதும்உண்ணும் விஷயங்களில் "நேட்டிவிட்டி " எல்லாம் பார்ப்பதில்லை.அதில் உள்ள நியூட்ரிசன் தான் நமக்கு வேண்டும்.

"யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்று யோசிக்கும் நமக்கு எல்லைக்கோடுகள் அனைத்தும் துணி காயப்போடும் கம்பிகளாகத்தான் தெரிகின்றன. உண்மையில், மனிதன் உருவாக்கிய இந்த எல்லைக்கோடுகள் இயற்கை விதியை மீறுகின்றன. இதனால் தான் செயற்கையாக பசி, பஞ்சம் , போர் உருவாக்கப்படுகின்றது.

சரி...விசயத்துக்கு வருவோம்"நியூட்ரிசன்" போட்டி வைத்தால் ஆப்பிள் வெர்சஸ் கொய்யாவில் யார் ஜெயிப்பார்கள் தெரியுமா?

முதலில் ஆப்பிள் 100 கிராம் ஆப்பிளில் 52 கலோரி சக்தி14 கிராம் மாவுச்சத்து அதில் 2.5 கிராம் நார்ச்சத்து புரதம் - 0.3கிராம். ரத்த அழுத்தத்தை குறைக்கும் தாது உப்பான பொட்டாசியம் 107 கிராம்

ரத்த அழுத்தத்தை கூட்டும் உப்பான சோடியம் 1mg

விட்டமின் சி- 7% = 4.6 IU

விட்டமின் ஏ - 1% = 54 IU

மெக்னீசியம் = 5mg

பாஸ்பரஸ் = 11mg

விட்டமின் பி3 = 0.091mg

விட்டமின் ஈ = 0.18mg

இவை அனைத்தும் ஆப்பிளில் உள்ளவை.

இனி கொய்யாவுக்கு வருவோம்.100 கிராம் கொய்யாவில் 68 கலோரி சக்தியும்,பொட்டாசியம் 417 மில்லிகிராம், சோடியம் 2 மில்லிகிராம், மாவுச்சத்து 14 கிராம் அதில் நார்ச்சத்து 5கிராம், புரதம் 2.6 கிராம்,விட்டமின் ஏ 12%= mg,விட்டமின் சி 380%= 228.3mgகால்சியம் 1%இரும்பு 1%மெக்னீசியம் 5% =22mgவிட்டமின் பி6 5%பாஸ்பரஸ் = 40mgவிட்டமின் ஈ = 0.2mg ரத்த சர்க்கரை ஏற்றும் விதத்தை கணிக்கும் Glycemic Index வைத்து இரண்டையும் சோதிக்கும் போது கொய்யாப் பழத்தின் Glycemic index - 32ஆப்பிளின் Glycemic index - 38இருப்பினும் இந்த இரண்டு பழங்களும் ரத்த சர்க்கரையை பெரிதாக ஏற்றாத Low glycemic பழங்களாக இருக்கின்றன.

நீங்கள் கூகுளில் எங்கு தேடினாலும் டயாபடிக் மக்கள் சாப்பிடக்கூடிய பழங்கள் லிஸ்ட்டில் - கொய்யா இடம் பெற்றிருக்காது.ஆனால் பழங்களிலேயே மிகவும் குறைந்த க்ளைசீமிக் இண்டெக்ஸ் கொண்ட பழம் - கொய்யா தான்.

மேற்கத்திய உலகில் உருவாக்கப்படும் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளில் கொய்யா விடுபட்டுவிடும்.காரணம்.. அங்கெல்லாம் கொய்யா கிடையாது. நான் கூட பேலியோ பரிந்துரைப்பில் கண்டதுண்டு. இந்தியா தவிர வேறு எங்கும் இத்தனை இலகுவாக கொய்யாப்பழம் ஈசியாக கிடைப்பதில்லை. அங்கு கிடைக்காத ஒரு பழத்தை எப்படி அவர்கள் எழுதுவார்கள்?

ஆனால் நம் ஊரில் எப்போதும் கிடைக்கும் இந்த பழத்தை நாம் நமது புத்தகங்களில் எழுத வேண்டும்.

அடுத்து economic / cost Vs benefit analysis செய்வோம் ஒரு கிலோ கொய்யா - ரூபாய் 50/-ஒரு கிலோ ஆப்பிள் - ரூபாய் 200 /-கொய்யாக்காய் பொருளாதார பேதமின்றி நம் அனைவருக்குமானது.

நான் தினமும் ஒரு கொய்யாக்காய் உண்டு வருகிறேன். எங்கள் குடும்பத்தில் எப்போதும் கொய்யாக்காய்தான். கொய்யாக்காயை நாம் பேலியோவில் பரிந்துரைக்கிறோம். நீரிழிவு உள்ள வயதானவர்கள்/ பல் பிரச்சனை இருப்பவர்கள் கொய்யாக்கனி சாப்பிடலாம் . ஆப்பிள் போலகொய்யாவிலும் நன்மை உண்டு/ கொய்யாப்பழத்தை கொய்து உண்ண இன்னும் தயக்கமேன்?

இந்த பயனுள்ள தகவலை சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story