கசாயம் குடிச்சா கொரோனா பாதிப்பு குறையுமா? அப்படி என்ன கசாயம்..?

கசாயம் குடிச்சா கொரோனா பாதிப்பு குறையுமா? அப்படி என்ன கசாயம்..?
கசாயம் குடிச்சா கொரோனா பாதிப்பு குறையுமா? அப்படி என்ன கசாயம்..?

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, தடுப்பூசி போட்டுக்கொள்வது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டே வருகிறோம். இவையுடன் கூடுதலாக, கசாயம் குடிப்பதன் மூலமும் கொரோனாவின் தாக்கத்தைக் குறைக்க முடியும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

கசாயம் என்பது மூலிகைகள், மசாலாப் பொருட்கள் போன்றவற்றை நீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் ஒரு பானம். இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் உள்ளன. எனவே, கசாயம் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம். இதனால், கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்கலாம்.

கொரோனாவிலிருந்து பாதுகாக்க உதவும் சில கசாயங்கள் பின்வருமாறு:

நிலவேம்பு கசாயம்: நிலவேம்பு ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

ஓமம், மிளகு கசாயம்: ஓமம் மற்றும் மிளகு இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகைகள்.

சுக்கு, மல்லி கசாயம்: சுக்கு மற்றும் கொத்தமல்லி விதைகள் இருமல், சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களைத் தடுக்க உதவும்.

இஞ்சி, பட்டை கசாயம்: இஞ்சி மற்றும் பட்டை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகைகள்.

இஞ்சி, துளசி, மஞ்சள் கசாயம்: இஞ்சி, துளசி மற்றும் மஞ்சள் ஆகிய மூன்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் மூலிகைகள்.

இந்த கசாயங்களை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். கசாயங்களை தயாரிக்கும்போது கீழ்க்கண்டவற்றை கவனத்தில் கொள்ளவும்:

கசாயங்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் தூய்மையானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

கசாயங்களை அதிக நேரம் கொதிக்க வைக்காமல், அவற்றின் மருத்துவ குணங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

கசாயங்களை வடிகட்டி, அவை குளிர பிறகு தேன் அல்லது பிற இனிப்புப் பொருட்களை சேர்த்து குடிக்கவும்.

கொரோனாவிலிருந்து பாதுகாக்க கசாயம் குடிப்பது ஒரு சிறந்த வழியாகும். இருப்பினும், கசாயங்களை மட்டும் சார்ந்திருக்காமல், மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மறக்காதீர்கள்.

1. மிளகு கசாயம்

தேவையான பொருட்கள்:

ஓமம் - 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை - 1

தேன் - சுவைக்கேற்ப

தண்ணீர் - 2 கப்

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் அதில் 1 டீஸ்பூன் மிளகுத் தூள் மற்றும் 1 டீஸ்பூன் ஓமத்தை சேர்த்து, நீர் பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
  • நீர் வற்றியதும், அடுப்பை அணைத்துவிட்டு, சற்று சூடு தணிந்ததும், அதை வடிகட்டி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்தால், கசாயம் தயார்.
  • இந்த கசாயத்தை தினமும் 2 முறை குடித்து வருவது நல்லது.

2. ஓமம் மற்றும் பட்டை கசாயம்

தேவையான பொருட்கள்:

ஓமம் - 1 டீஸ்பூன்

ஏலக்காய் - 1

பட்டை - 1 சிறிய துண்டு

தேன் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் ஓமம், ஏலக்காய், பட்டை சேர்த்து 5 நிமிடம் நன்கு உயர் தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, கசாயத்தை வடிகட்டி, தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
  • விருப்பமிருந்தால், இந்த கசாயத்துடன் இஞ்சியை சிறிது தட்டிப் போட்டு கொதிக்க வைக்கலாம்.

3.சுக்கு மல்லி கசாயம்

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி விதைகள் - 2 டீஸ்பூன்

கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்

சுக்கு - 2 துண்டு

பனை வெல்லம் - 1 கைப்பிடி

3 கப் தண்ணீர்

செய்முறை

  • அனைத்து பொருட்களையும் பொடியாக உடைத்து கொள்ளுங்கள்.
  • 3 கப் தண்ணீர், 1 1/2 கப் வரும் வரை எல்லா பொருட்களையும் போட்டு 10 முதல் 15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
  • இப்படி சுண்டக் காய்ச்சி வடிகட்டி அருந்தினால் மிளகின் காட்டம் தொண்டையில் உணரமுடியும்.
  • இது தொண்டை வலியை போக்க உதவுகிறது.

4. இஞ்சி, பட்டை கசாயம்

தேவையான பொருட்கள்:

ஏலக்காய் - 1

மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

சுக்குப் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

பட்டை - 1 துண்டு

தேன் - சுவைக்கேற்ப

தண்ணீர் - 2 கப்

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பின் கொதிக்கும் நீரில் ஏலக்காய், பட்டை, சுக்குப் பொடி, மிளகுத் தூள் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
  • பின்பு அதை வடிகட்டி ஓரளவு சூடு தணிந்ததும், தேவையான அளவு தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும் .

5. இஞ்சி, துளசி, மஞ்சள் கசாயம்

தேவையான பொருட்கள்:

துளசி இலைகள் - 4-5

சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் துளசி இலைகள், சுக்குப் பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
  • சூடு தணிந்ததும், அதை வடிகட்டி சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
  • வேண்டுமானால், இந்த கசாயத்தில் துளசி இலைக்கு பதிலாக புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்

Tags

Next Story