முதல்- அமைச்சர் ஸ்டாலின் திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி

முதல்- அமைச்சர்  ஸ்டாலின் திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதி
X

முதல்வர் ஸ்டாலின்.

முதல்- அமைச்சர் ஸ்டாலின் திடீர் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழ்நாட்டு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றது முதல் தீவிரமாக பணியாற்றி வருகிறார். அரசு நிகழ்ச்சி மற்றும் பொதுநிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி, திருமண விழாக்கள் என்று தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். வியாழக்கிழமை அன்று சென்னை நந்தனத்தில் அதி நவீன வசதிகளுடன் 12மாடிகளுடன் அமைக்கப்பட்டு இருந்த மெட்ரோ ரெயில் தலைமை அலுவலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.இதில் மத்திய மந்திரியும் கலந்து கொண்டார். அதே நாளில் சென்னை தலைமைச்செயலகத்தில் மாநில திட்டக்குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார். அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டு இருந்த அம்பேத்கர் முழு உருவச்சிலையையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

புதன்கிழமை அன்று சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தினார், இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை எடுத்து அறிவித்தார். இப்படி தொடர்ந்து பல் வேறு நிகழ்ச்சியில் எந்த ஓய்வும் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு வருகிறார்.

இவ்வளவு நெருக்கடியான பணிகளுக்கு இடையேயும் தினசரி காலையில் உடற்பயிற்சி, யோகா செய்யவும் மாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யவும் முதல்வர் ஸ்டாலின் தவறுவது இல்லை. அதே போல் தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு அதை தீர்த்து வைப்பதையும் கடமையாக முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். மேலும் அடிக்கடி கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்தித்து எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்தும் பேசி வருகிறார். இவ்வாறு எந்த ஓய்வும் இல்லாமல் அவர் பணியாற்றி வருவது அவருடைய உடல் நலத்தையும் அவ்வப்போது பாதிக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு கொரனாவால் பாதிக்கப்பட்ட அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த நிலையில் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மீண்டும் கொரனா நோயால் பாதிப்பட்டுள்ளார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. அவர் உடல் நிலைக்குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் ராமச்சந்திரா மருத்தவ கல்லூரி மருத்துவ மனை சார்பில் முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை குறித்து அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். அதில் முதல்வர் ஸ்டாலின் முதுகுவலி தொடர்பான வழக்கமான பரிசோதனைக்கு வந்தார். பரிசோதனை முடிந்து அவர் வீடு திரும்பி விட்டார் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். முதல்வர் ஸ்டாலின் திடீர் என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது தி.மு.க. தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
நவீன வசதிகளுடன் 103 ரெயில் நிலையங்கள் புதுப்பிப்பு – பிரதமர் மோடியின் அதிரடி திறப்பு!