'இதய செயலிழப்பு' 'மாரடைப்பு' என்ன வித்தியாசம்..? தெரிஞ்சிக்குவோம்..!

இதய செயலிழப்பு மாரடைப்பு என்ன வித்தியாசம்..? தெரிஞ்சிக்குவோம்..!

Cardiac arrest vs heart attack-இதய செயலிழப்பு மற்றும் மாரடைப்பு வேறுபாடு என்ன? (கோப்பு படம்)

இதயம் நின்றுவிட்டதா? மாரடைப்பா? இந்த இரண்டு சொற்களுக்குமான அர்த்தம் ஒன்றுதானா? அதற்கான வித்தியாசத்தை அறிவோம், வாங்க.

Cardiac Arrest Vs Heart Attack, Causes of Cardiac Arrest, Causes of Heart Attack, Symptoms of Cardiac Arrest, Sypmtoms of Heart Attack

இதயம் உடலின் ஆதாரம். ஒரு நாளைக்கு லட்சம் முறைக்கும் மேல் துடிக்கும் இந்த சிவப்பு நிற உறுப்பு, அசட்டையாக நினைப்பதற்கு சாதாரண தசைத் தொகுப்பு அல்ல. அந்த சிவப்பு வீரனுக்கு சின்ன பழுது ஏற்பட்டாலும், உடலே ஸ்தம்பித்து போய்விடும் அபாயம் உண்டு. அப்படித்தான், பலரும் குழப்பி கொள்ளும் 'இதய செயலிழப்பு' (cardiac arrest) மற்றும் 'மாரடைப்பு' (heart attack) நிலைகள்.

இரண்டுமே ஆபத்தானவையே...ஆனால் அடிப்படையில் இருக்கும் முக்கிய வித்தியாசங்களைப் புரிந்துகொண்டால் அவற்றைத் தவிர்க்கவோ, அவசர காலத்தில் உயிர்காக்கும் முதலுதவியையோ அளிக்க முடியும்.

Cardiac Arrest Vs Heart Attack

'சார், மயங்கிட்டார்.... இதயம் நின்னுடுச்சு...' – சரிதானா?

மயக்கத்தை மட்டுமே வைத்து அது இதயச் செயலிழப்பு என உறுதியாகக் கூறிவிட முடியாது. இதயச் செயலிழப்பு என்பது இதயத்தின் மின் செயல்பாடுகளில் திடீர் கோளாறு ஏற்பட்டு அது துடிப்பதை நிறுத்திவிடும் நிலை. இதனால் மூளை உட்பட அனைத்து உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

நிமிடங்களில், உயிரே போய்விடும்! ஆம், உண்மையிலேயே 'இதயம் நின்றுவிட்டது' என்னும் நிலை இதுதான்.

'சார், திடீர்னு நெஞ்சை பிடிச்சிட்டார்... ஆஸ்பத்திரிக்கு போங்க...' – ஏன், என்ன ஆயிருக்கும்?

இதுபோன்ற நெஞ்சுவலி மாரடைப்பின் வலுவான அறிகுறி. மாரடைப்பு என்பது என்ன? இதயத்திற்கு ரத்தம் செல்லும் 'கரோனரி' தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தசைகளுக்கு போதிய ரத்தமும், உயிர்வளியும் கிடைக்காமல் திசுக்கள் இறந்துபோகும் நிலைதான் மாரடைப்பு.

Cardiac Arrest Vs Heart Attack

ஒவ்வொரு நொடியும் உயிர் மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கும்.. உடனடி மருத்துவ உதவி இல்லை என்றால், சிக்கல் இதய செயலிழப்பு நிலைக்கு கூடத் தள்ளிவிடும்.

வித்தியாச பட்டியல்: இதய செயலிழப்பு vs மாரடைப்பு






எது வந்தாலும் பயம்தான்... யாருக்கு இதெல்லாம் வரும்?

இதய செயலிழப்பு: பொதுவாக முன்பே இதய கோளாறு உள்ளவர்கள், மின்சாரம் தாக்கியவர்கள், அதீத ரத்தப்போக்கு ஏற்பட்டவர்கள் போன்றவற்றுக்கு ஆபத்து இருக்கும். திடீரென ஒரு விபத்தில் கூட சிலருக்கு இது ஏற்படலாம்.

மாரடைப்பு: உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்புச்சத்து, புகைப்பழக்கம், மரபணு ரீதியான பாதிப்புகள், உடல்பருமன், மன அழுத்தம் போன்றவை இருப்பவர்களுக்கு மாரடைப்புக்கான ஆபத்து அதிகம்.

Cardiac Arrest Vs Heart Attack

சரி... இந்த சிக்கல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியாதா?

ஏன் முடியாது! வழக்கமான உடல் பரிசோதனைகள், குறிப்பாக இதயம் சார்ந்த ஈசிஜி போன்ற பரிசோதனைகள் இதயத்தின் மின் செயல்பாட்டை தெரிவித்துவிடும். இதயத்தின் தமனிகளை உற்று நோக்கும் ஆஞ்சியோகிராம் முக்கியமானது. இருப்பினும், அறிகுறிகள் இல்லாத பலருக்குக் கூட திடீர் மாரடைப்பு அல்லது இதயச் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆதலால், வருடாந்திர உடல் பரிசோதனைகளைத் தவிர்க்கவே கூடாது.

எப்படி காத்துக்கொள்வது?

இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் புகை பிடிப்பதை நிறுத்துங்க. இரத்த அழுத்தம், சர்க்கரை அளவுகளை கட்டுக்குள் வைக்கவும். உடல் இயக்கம் தினமும் ஒரு மணி நேரம் கட்டாயம். காய்கறிகள், பழங்கள் நிறைந்த உணவு பழக்கத்தைக் கொண்டால் வரும் பிரச்சினைகளை பாதியாக குறைத்துவிடலாம். பரபரப்பு வேண்டாம்... மனதை அமைதியாக வைக்க, யோகா, தியானம் போன்றவற்றையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

Cardiac Arrest Vs Heart Attack

வந்துட்டா என்ன பண்றது? - டென்ஷன் வேண்டாம்... தெரிஞ்சிக்கங்க!

இதய செயலிழப்பு: பக்கத்துல நிற்பவர்கள் உடனே CPR என்ற முதலுதவியைத் தொடங்க வேண்டும். இதயத்திற்கு செயற்கையாக மசாஜ் கொடுத்து துடிப்பை மீட்டெடுக்க இது உதவும். அருகில் மருத்துவமனை இருந்தால் உடனே வாகனத்தில் நோயாளியைச் சேர்க்க வேண்டும். குறிப்பிட்ட ஷாக் சிகிச்சைகள் உள்பட முழுமையான மருத்துவக் கண்காணிப்பில் நபரைக் காப்பாற்ற வாய்ப்புள்ளது.

மாரடைப்பு: நெஞ்சுவலி உடனே ஆஸ்பத்திரிக்கு போங்க – அவ்வளவுதான்! தாமதிக்க தாமதிக்க இதயம் பலவீனம் அடையும்...எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் அபாயம் விளைவிக்கும். வைத்தியர் உரிய சிகிச்சை தருவார்.

Cardiac Arrest Vs Heart Attack

வார்த்தை ஜாலம்

'கார்டியாக் அரெஸ்ட்', 'ஹார்ட் அட்டாக்' எனக் கேட்கும்போது மிரட்சிதான் வரும். ஆனால் அந்த சிவப்பு வீரனைப் பற்றி புரிதல் இருந்தால், பதறாமல் சிந்தித்து நடவடிக்கை எடுப்பதன் மூலம் பல மதிப்புமிக்க உயிர்களைக் காக்கலாம். உங்களுக்கும், உங்கள் அன்பிற்குரியவர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான இதயம் அமைய இனிய வாழ்த்துகள்.

Tags

Next Story