Benefits of Sitting on the Floor-சம்மணம் போட்டு உட்கார்ந்தால் இவ்ளோ நன்மைகளா?

Benefits of Sitting on the Floor-சம்மணம் போட்டு உட்கார்ந்தால் இவ்ளோ நன்மைகளா?

benefits of sitting on the floor-தரையில் சம்மணமிட்டு அமர்வதால் கிடைக்கும் நன்மைகள் (கோப்பு படம்)

தரையில் சம்மணமிட்டு உட்கார்ந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் காண்போம் வாங்க.

Benefits of Sitting on the Floor

15 நிமிடம் சம்மணமிட்டு உட்காருங்கள்

கடைசியாக எப்போது கீழே சம்மணம்போட்டு உட்கார்ந்தீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? ஏனெனில் நாம் தரையில் உட்கார்வதே அரிதாகிவிட்டது. ஒருவேளை தரையில் உட்காராமல் இருப்பவர் என்றால் இனிமேல் தரையில் சம்மணமிட்டு 15 நிமிடம் உட்காருங்கள்.


Benefits of Sitting on the Floor

இதுவரை அப்படி உட்காராமல் இருப்பர்களுக்கு கால் முட்டிகள் இரண்டும் தரையில் படியாது. லேசாக முட்டிகள் மேல் கையை வைத்து அமுக்கி தரையில் கிடையாக பதியவைத்து உட்கார முயற்சி செய்யுங்கள்.

இப்படி உட்கார்வதால், முதுகை வளைக்க முடியாது. முதுகு நிமிர்ந்து நேராகத்தான் இருக்கும். இப்படி நன்றாக சம்மணமிட்டு உட்கார்ந்து ஒரு 15 நிமிடங்கள் இருந்துவிட்டால் ஜிம்னாஸ்டிக்ஸுக்கு பின் எழுவது போன்று முதுகெங்கும் நல்ல ஆயுர்வேத மசாஜ் செய்தது போல அத்தனை சுகமான உணர்வு கிடைக்கும்.

நாற்காலியில் உட்கார்வது சில பத்தாண்டுகளாக இருக்கும் வழக்கம்தான். நாற்காலி, சோபாவில் அமர்வதால் பல தீமைகள் உள்ளன.

Benefits of Sitting on the Floor


முதுகு வலி

இதனால் நம் முதுகுத்தண்டு நேராக இருக்கும் அவசியமில்லை. நம் பின் புறத்தையும் தொடைகளையும் நாற்காலி தாங்கிக்கொள்கிறது. அதனால், முதுகுத்தண்டுக்கு உடலை தாங்கி நிற்கும் அவசியமே இல்லை. இதனால் முதுகுத்தண்டு பலவீனமாகி முதுகுவலி வருகிறது.

முதுகு வலி என்றதும் நாமும் பதறியடித்து ஒரு மருத்துவரிடம் ஓடி ஆயிரமாயிரமாக செலவு செய்திருப்போம். ஆனால் முதுகுவலி தீர்ந்தபாடாக இருக்காது. மருத்துவர்களுக்கும் ஆயிரம் விளக்கங்களைக்கூறி பணம் வாங்கிவிடுவார்கள். அதற்கு ஒரே காரணம், நாம் சம்மணமிட்டு கீழே உட்காருவது கிடையாது என்பது மட்டுமே.

Benefits of Sitting on the Floor

நாம் தரையில் அமர்ந்து முயற்சிக்காமல் சிகிச்சைக்குச் சென்றால், தலையில் ஹெல்மெட் போட்டுக்கொண்டு சுவரில் தலையை முட்டிக்கொள்வது போலத்தான். ஆமாம், மருத்துவரிடம் சென்றால் வலி வரும் விகிதம் குறையுமே தவிர, வலி நிற்கப்போவது இல்லை. ஜெரென்டாலஜி (முதுமை இயல்) எனப்படும் முதியவர்களை வைத்து ஆய்வு நடத்தும் மருத்துவர்களை கேட்டால் சொல்வார்கள்.

ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டுமெனில் அவரை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க சொல்லுங்கள் என்பார்கள். கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் கையோ காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு .

தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விழும் நிலையில் இருந்தால் அவர் விரைவில் மரணிக்கப்போகிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம்..

Benefits of Sitting on the Floor


பாய்ண்ட்

ஜெரென்டாலஜித் துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து எழ வைத்து ஆய்வு செய்தார்கள்.

கை, முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு.

ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு. இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு.

இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆண்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விஷயம் என்ன தெரியுமா? பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இறப்பிற்கான ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21சதவீதம் கூடுகிறது என்பதுதான்.

தரையில் கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது .

Benefits of Sitting on the Floor

இந்தியா,சீனா, ஜப்பான் என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள். செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணம் இருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்.


சோபா, நாற்காலி

கீழே உட்காருவது நாகரீகக் குறைவு எனக் கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, நாற்காலிகள் என வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுக்காமல் வாங்கி விடுகிறோம். சோபா மற்றும் சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்து போகும் உணர்வு.

அடுத்து பின்புறவலி. காரணம், சோபாவில் உட்காருவதால் பின்புறத் தசைகளுக்கு வேலையே கிடையாது. பின்புறம் இப்படி செயல்பாடில்லாமல் இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Benefits of Sitting on the Floor

கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள். ஆனால், இப்போது குளியலறையில் வழுக்கி விழும் ஏராளமான கதைகளைக் கேட்கிறோம்.


எலும்பும் தசையும் உறுதியாகும்

வயதானவர்கள் கீழே விழுந்து கை கால்களை முறித்துக்கொள்ளாமல் இருந்தார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வாழ்ந்ததே தரையில் தான். தரையில் அமர்ந்து சாப்பிட்டார்கள். தரையில் படுத்துத் தூங்கினார்கள். இப்படி தரையில் படுத்து, உட்கார்ந்து, எழும் அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும் எலும்புகளும் அத்தனை வலுவாகி விடுகின்றன.

ஆனால், சோபாவில் உட்கார்ந்து, மெத்தையில் படுத்து, பாதம் மட்டுமே தரையில் படும்படி வாழும் நாகரீக சமூக முதியவர்களுக்கு வயதான பின் இருக்கும் மிகப்பெரும் ஆபத்து கீழே விழுவதுதான். ஆஸ்டியோ பெரோசிஸ் உள்ளிட்ட எலும்பு குறைபாடுகள் பலவும் மேலே உட்கார்வதால் வருகின்றன என சொல்லுகின்றன ஆய்வுகள்.

Benefits of Sitting on the Floor


சுகாசனம்

சுகாசன முறையில் சம்மணம் போட்டு அமர்ந்து உண்பதும், புழங்குவதும் நம் ஆயுளை கூட்டி முதுகுத்தண்டு குறைபாடுகளை போக்குக்கின்றன. பின்புறத்தையும் முதுகுத் தண்டையும், எலும்பு மூட்டையும் வலுவாக்குகின்றன.

அதனால், இதுநாள் வரை கீழே உட்கார்ந்தது இல்லை எனில் இனி உட்கார்ந்து பழங்குங்கள். அப்படி தரையில் உட்கார்கையில் முட்டி தரையில் படாமல் தூக்கி இருந்தால் அவ்வபோது கையை வைத்து மெதுவாக கீழே அமுக்கி விடுங்கள். தரையில் முட்டி படியவேண்டும். உட்கார, உட்கார தானே முட்டி தரையில் படியும் நிலை வந்துவிடும். அதனால் தினமும் தரையில் அமருங்கள்.

இது காலின் சேர்க்கைத் (Adductor Muscle) தசைகளை வளையும் தன்மை (Flexible) ஆக்கி நமது தோரணையை (Posture) சரி செய்யும். தரையோடு சேர்ந்த வாழ்க்கை தரமான வாழ்க்கையாக இருக்கும். தரையில் அமர்வோம், தரையில் அமர்ந்து உண்போம். தரையில் படுத்து உறங்குவோம்.

Tags

Next Story