களைகட்டும் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா காதல்..?!

நடிகை ராஷ்மிகா மந்தனா, 2016ல் கன்னடத்தில் ரிலீஸான 'கிரிக் பார்ட்டி' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனை அடுத்து தெலுங்கில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'கீதா கோவிந்தம்' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிய ராஷ்மிகா வந்தனா, க்ளைமேக்ஸில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு லிப்லாக் கிஸ் அடித்து தெலுங்கு ரசிகர்களைக் கிறங்கடித்தார். தொடர்ந்து 'டியர் காம்ரேட்' படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து டோலிவுட் ரசிகர்களின் மனத்தில் கனவுக் கன்னியாக மலர்ந்தார்.
தமிழில் 'சுல்தான்' படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடித்து தமிழில் தடம் பதித்தார், ராஷ்மிகா மந்தனா. தமிழில் 'சுல்தான்', தெலுங்கில் 'புஷ்பா' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் நடிக்க அடித்தது அதிர்ஷ்டக் காற்று. அதேபோல் இந்தியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' படத்திலும் நடித்துள்ளார் இந்தத் திரைப்படம் அக்டோபர் 7ம் தேதி வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து தற்போது இந்தியிலும் அறிமுகமாகும் ராஷ்மிகாவுக்கு இந்திய அளவில் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அதகளமாகுது. இந்தநிலையில், ராஷ்மிகாவுக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே காதல் என்றும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 'கீதா கோவிந்தம்' படத்தில் நடிக்கும் போதே இருவருக்குமான கெமிஸ்ட்ரி கெத்து காட்டியது. இந்நிலையில், இதுகுறித்து ராஷ்மிகா மந்தனா, ''இந்த வதந்திகள் எல்லாம் ரொம்ப அழகா இருக்குது'' எனக் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu