லியோ படத்திலிருந்து விலகிய த்ரிஷா.. உண்மையை ஓபனாக கூறிய தாய்!

லியோ படத்திலிருந்து விலகிய த்ரிஷா.. உண்மையை ஓபனாக கூறிய தாய்!
X

அம்மா உமா கிருஷ்ணனுடன் மகள் திரிஷா கிருஷ்ணன்

திரிஷா காஷ்மீருக்கு தனியார் விமானத்தில் படக்குழுவுடன் கிளம்பிச் சென்றார். அவர் சென்று இரண்டாவது நாளிலேயே அவரின் போர்சன்களை முடித்துவிட்டு அனுப்பிவிட்டனர் என தகவல் பரவியது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் நடிகை திரிஷாவுக்கு சண்டை அதனால் பாதியிலேயே கிளம்பி சென்னை வந்துவிட்டார் திரிஷா. லியோ படத்திலிருந்து விலகிவிட்டார் திரிஷா. குளிர் தாங்க முடியாமல் சென்னைக்கே திரும்பி வந்துவிட்டார் திரிஷா என அவரைப் பற்றி பல செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. உண்மை என்ன என தெரிந்து கொள்ள திரிஷா தரப்பில் விசாரித்தோம். திரிஷாவின் தாயே சொன்ன தகவலின்படி மேலே சொன்ன அத்தனை விசயங்களும் பொய் எனவும், உண்மை இதுதான் என போட்டுடைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக இணையும் படம் லியோ. இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்குமாறு அனைத்து காட்சிகளும் உருவாக்க இருக்கிறார் இயக்குநர் லோகேஷ்.

இந்நிலையில், திரிஷா காஷ்மீருக்கு தனியார் விமானத்தில் படக்குழுவுடன் கிளம்பிச் சென்றார். அவர் சென்று இரண்டாவது நாளிலேயே அவரின் போர்சன்களை முடித்துவிட்டு அனுப்பிவிட்டனர் என தகவல் பரவியது. அதன்படி விமான நிலையத்தில் யாரோ ஒருவருடைய புகைப்படத்தை எடுத்து போட்டு அதுதான் திரிஷா என வைரலாக்கினர். இந்நிலையில், திரிஷாவின் போர்சன் முடிந்து அவர் வீடு திரும்பிட்டாரா என அவரின் தாய் உமா கிருஷ்ணனிடம் பேசும்போது அது முற்றிலும் தவறான தகவல் என்பதை புரிந்துகொண்டோம்.

திரிஷாவின் தாயார் விளக்கமளித்த நிலையில், திரிஷா இப்போதும் படக்குழுவுடன் காஷ்மீரிலேயே இருக்கிறார். அவருக்கு 1 மாத காலம் வரையிலும் படப்பிடிப்பு காட்சிகள் இருக்கின்றன. அதிக நேரம் விஜய்யுடன் காட்சிகள் இருக்கும்படிதான் ஸ்கிரிப்ட் இருக்கிறதாம். மேலும் மாஸ்டர் படத்தில் கில்லி மொமண்ட் கிரியேட் செய்ததைப் போல திரிஷா - விஜய் பழைய மொமண்ட் களையும் கிரியேட் செய்கிறார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story