த்ரிஷா விவகாரம்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு போலீசார் சம்மன்

த்ரிஷா விவகாரம்: நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு போலீசார் சம்மன்

நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் மன்சூர் அலிகான்.

த்ரிஷா விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் விளக்கு போலீசார் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.

நடிகை த்ரிஷா விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஆயிரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

நடிகர் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் இந்த படத்தில் தனக்கு நடிகை த்ரிஷாவுடன் படுக்கையறை காட்சிகள் அமையவில்லை. நடிகைகளுடன் நெருங்கிக் கூட பேச முடியவில்லை .தனியாக அழைத்துச் சென்று தனியாக விட்டுவிட்டனர் என்று நடிகை திரிஷா பற்றியும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் அவதூறாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதனை தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்தார். அந்த கண்டனத்தின் அடிப்படையில் நடிகை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த பிரச்சனை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கம் செய்யப்படுவார் என்று அறிவித்தது. ஆனால் மன்சூர் அலிகான் இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை .

இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து இந்த பிரச்சனையை கையில் எடுத்தது. தேசிய மகளிர் ஆணையம் சென்னை போலீஸ் டிஜிபிக்கு ஒரு மெயில் அனுப்பி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது .

அந்த உத்தரவின் அடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் நடிகர் மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் நாளை நேரில் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரான நடிகை த்ரிஷாவிடமும் போலீசார் வாக்குமூலம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags

Next Story