மஞ்சுமல் பாய்ஸ் போலவே அதிக வசூல் மழை பொழிந்த மல்லு படங்கள்..!
இந்திய சினிமாவில் பிராந்திய மொழிகளின் எழுச்சி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சமீப காலங்களில், மலையாளத் திரைப்படங்கள் தரத்திலும், வசூலிலும் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகின்றன. தமிழ் ரசிகர்களும் இந்த மாற்றத்தை வரவேற்பதோடு, மற்றுமொரு தென்னிந்திய மொழியின் சிறப்புகளை அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஓடிடி தந்த வெளிச்சம்
ஓடிடி தளங்களின் வருகைக்கு முன்பு, திரைப்படங்களைத் திரையரங்குகளில் மட்டுமே ரசிக்க முடிந்தது. மொழித் தடைகள் காரணமாக, மலையாளப் படங்களைத் தமிழ் ரசிகர்கள் கண்டு களிப்பது என்பது அரிதாக இருந்தது. ஆனால், ஓடிடி தளங்களில் பல்வேறு மொழிகளிலான திரைப்படங்கள் எளிதில் கிடைக்கத் தொடங்கிய பிறகு, பல அற்புதமான மலையாளப் படங்கள் தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்தன.
'பிக் ஹீரோ' படங்களின் காலம் கடந்துவிட்டதா?
ஒரு காலத்தில் 'பிக் ஹீரோ' படங்கள் மட்டுமே வசூல் சாதனை செய்யும் என்ற நிலைமை இருந்தது. ஆனால், தற்போது கதைக்களம் நிறைந்த, குறைந்த பட்ஜெட்டிலான திரைப்படங்களும், மிகப் பெரிய வசூல் சாதனைகளைச் செய்து வருகின்றன. இந்த மாற்றத்தில் மலையாளப் படங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.
கொரோனாவுக்குப் பிறகும், ஓடிடி வருகைக்குப் பிறகும்
கொரோனா பெருந்தொற்று திரையுலகைப் பெரிதும் பாதித்தாலும், திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு, மலையாளத் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது பன்மடங்கு அதிகரித்துவிட்டது. புதிய இயக்குனர்கள், நட்சத்திரப் பிம்பம் இல்லாத கலைஞர்கள் என பல புதுமைகள் மலையாளத் திரையுலகில் புரட்சி செய்து வருகின்றன. அதே நேரத்தில் OTT வாயிலாளவும் தரமான மலையாளப் படங்கள் மிகுந்த வரவேற்பைப் பெறுவது இந்த தொழில்நுட்ப சகாப்தத்தின் அடையாளம் .
இதோ டாப் 10!
தற்போது உலக அளவில் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்களின் முதல் 10 பட்டியலைப் பார்ப்போம்:
- மஞ்சும்மெல் பாய்ஸ் (176 கோடி)
- 2018 (175 கோடி)
- புலிமுருகன் (152 கோடி)
- லூசிபர் (127 கோடி)
- பிரேமலு (106 கோடி)
- நேரு (86 கோடி)
- பீஷ்ம பருவம் (85 கோடி)
- ஆர்.டி.எக்ஸ் (84 கோடி)
- கண்ணூர் ஸ்குவாட் (82 கோடி)
- குருப் (81 கோடி)
மொழி ஒரு தடையல்ல. நல்ல சினிமா எல்லைகளைக் கடக்கும்...
இந்தப் பட்டியலில் உள்ள திரைப்படங்கள் அனைத்தும் தரமான கதையம்சம் கொண்டவை; தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டவை. இதுபோன்ற திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு மொழி ஒரு தடையாக இருக்காது என்பதே உண்மை. நல்ல சினிமாக்கள் எப்போதும் எந்த எல்லைகளையும் கடந்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கும்.
தற்போது மஞ்சுமல்பாய்ஸ் மோகம் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இந்த படத்தின் ஒட்டுமொத்த வசூல் 176 கோடி ரூபாயைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் 200 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது இடத்தில் வெள்ளம் குறித்து வெளியான 2018 திரைப்படம் தான் இருக்கிறது. இதில் டோவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 175 கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருந்தது இந்த படம்.
மோகன்லால் நடிப்பில் வெளியான புலிமுருகன் மூன்றாவது இடத்திலும், லூசிஃபர் நான்காவது இடத்திலும் உள்ளன. சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் பிரேமலு திரைப்படம் 5வது இடத்தில் உள்ளது
ஆறாவது இடத்தில் மீண்டும் மோகன்லால் திரைப்படம்தான். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான நெரு திரைப்படம் 86 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மம்மூட்டியின் பீஷ்பபர்வம் திரைப்படம் ஏழாது இடத்திலும், கன்னூர் ஸ்குவாட் திரைப்படம் ஒன்பதாவது இடத்திலும் உள்ளது. எட்டாவது இடத்தில் ஆர்டிஎக்ஸ் திரைப்படம்.
கடைசியாக பத்தாவது இடத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான குரூப்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu