சசிகுமார் படத்தின் டைட்டில் மாறியது..!

சசிகுமார் படத்தின் டைட்டில்  மாறியது..!
X

சசிகுமார் (பைல் படம்)

நடிகர் சசிகுமார் நடித்து வரும் 'காமன்மேன்' படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது. இதனை படக்குழு உறுதி செய்துள்ளது.

'கழுகு' பட இயக்குநரான சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி வந்த 'காமன் மேன்' என்கிற படம் தற்போது, 'மிருகமாய் மாற' என்று டைட்டில் மாறியிருக்கிறது. ஏற்கெனவே, ஏ.ஜி.ஆர். ரைஸ்ட் பிலிம்ஸ் நிறுவனம் 'காமன் மேன்' டைட்டிலை முறையாகப் பதிவு செய்திருந்ததால், சசிகுமார் நடிக்கும் படத்துக்கு டைட்டிலை மாற்றினார்களாம்.

சசிகுமார் நாயகனாக நடித்து வரும் 'மிருகமாய் மாற' படம் வருகிற அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்கிறார்கள். இதனை சசிகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதுடன் கூடவே ஒரு வீடியோவையும் இணைத்துப் பகிர்ந்துள்ளார்.

'மிருகமாய் மாற' படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இப்படத்தில் சசிகுமார் சவுண்ட் இன்ஜினீயராகவும் கன்னட நடிகையான ஹ்ரிப்பிரியா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மேலும், நடிகர் விக்ராந்த் இப்படத்தில் ரத்தம் உறைய வைக்கும் கொடூர கொலைக் குற்றவாளியாகவும் சைக்கோ வில்லனாகவும் வித்தியாசமாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர், கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கெனவே வெளியாகி சசிகுமார் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!